March 21, 2023

நிர்பயா ; குற்றவாளிகளைக் காக்க ஏன் சிலர் அக்கறைக் காட்டுகிறார்கள்!

பெங்களூரில் 2012 இல் ஏழு வயது குழந்தையை கற்பழித்தவன் அந்த குழந்தை படித்த பள்ளியில் சாதாரண ப்ளம்பர் அவன் வழக்கில் இருந்து விடுபட்டு விட்டான் அவனுக்காக வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள் பெங்களூரிலேயே சிறந்த வழக்கறிஞர்கள் சில மணி நேரங்களுக்கு லட்சத்தில் சம்பளம் வாங்குபவர்கள்.

நிர்பயா வழக்கு இதுவரை எத்தனை தடவை என்று கணக்கிட முடியாத அளவுக்கு நீதிமன்றத்தில் முறையீடும் ஏன் இப்போது சர்வதேச நீதிமன்றம் செல்லவும் முடிவு (ஒரு உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் தலையிட முடியுமா என்று தெரியவில்லை அது தனி விவாதம்)

சர்வதேச நீதிமன்றத்தை அணுகி தூக்கு தண்டனையை நிறுத்தி, இக்கொடூர பிணம்தின்னி குற்றவாளிகளை காப்பாற்ற துடிப்பவர்கள் இந்திரா ஜெய்சிங் போன்ற இடதுசாரி வக்கீல்கள்.

தூக்கிலிட வேண்டும் என்று கூறுகிற கோடிக்கணக்கான சாமானிய மக்கள் அனைவரும் ஏதோ மனித ரத்தம் குடிக்க விரும்பும் காட்டுமிராண்டிகள் போலவும், இந்திரா ஜெய்சிங் மாதிரியான இடதுசாரி கும்பல்கள் தான் மனித நேயத்தின் வடிவம் போலவும் அர்த்தமற்ற சுய தம்பட்டங்கள் வேறு !

என் சந்தேகம் எங்கிருந்து இவர்களுக்கு பணம் எந்த ஒரு பண பலமும் பெரிய பின்புலமும் இல்லாத இவர்களால் எப்படி லட்ச கணக்கில் பணம் வாங்கும் வழக்கறிஞர்களை நியமிக்க முடிகிறது? இத்தனை யோசனை செய்ய வைக்க முடிகின்றது? இவர்களை காப்பாற்ற ஏன் இத்தனை முயற்சி?

ஒவ்வொரு கற்பழிப்புகள் நடக்கும் போதும் உலகளவில் சர்வதேச மீடியாவில் இருந்து எல்லாம் இந்தியாவில் மேலும் ஒரு கற்பழிப்பு என்று கூவுகின்றன.. உண்மையில் இந்த கற்பழிப்பு எல்லாம் யாரோ சிலரின் உடல் பசிக்கு நடந்தது தானா அல்லது திட்டமிட்டு இதை ஒரு குழுவாக இயங்கி இது போன்ற நபர்களை தேர்ந்தெடுத்து இதை செய் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று செய்கிறார்களா அதனால் தான் நீதிமன்றம் தீர்பளித்தாலும் இவர்கள் காப்பாற்ற முயலுகிறார்களா?

கற்பழிப்போ அல்லது ஏதோ ஒரு குற்றமோ நடந்தால் சட்டத்தை வலுவாக்க வேண்டும் இந்தியா வில் லஞ்சம் கொடுத்தால் எல்லாம் நடக்கும் இங்கு நீதி சரியில்லை அது சரியில்லை என்கிற குழு எல்லாம் இதுபோன்ற நேரங்களில் வாயே திறப்பது இல்லையே ஏன்??

இது உண்மையில் தற்செயலாக நடப்பது போல தெரியவில்லை, இது இடது சாரிகளின் திட்டமிட்ட சதியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்

இருக்கும் சட்டங்களையே ஓட்டையை போடுபவர்கள் இதில் மக்களுக்கு தகுந்தமாறி சட்டங்களை மாற்றனும்னு வியாக்கியானம் வேறு..😏😏

#MaduraiSathya