September 20, 2021

நாளை முதல் தென் மேற்கு பருவ மழை காலம் !

ஆந்திரா,தெலுங்கானாவில் பலரை பலி வாங்கியுள்ள கத்திரி வெயில் காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த 25 நாட்களாக நிலவிய கத்திரி வெயிலால் தமிழகத்தில் அனேக இடங்களில் வெயில் வாட்டி வதைத்தது.
rain may 29
அதிலு, 26ம் தேதி அதிகரித்த வெயில் காரணமாக தமிழகத்தில் 2 பேர் இறந்துள்ளனர். மொத்தத்தில் நாடு முழுவதும் வாட்டி எடுத்த வெயில் காரணமாக நேற்று வரை 1400 பேர் வரை இறந்துள்ளனர்.

ஆனாலும் இன்றுடன் கத்திரி வெயில் முடிவுக்கு வருவதை அடுத்து படிப்படியாக வெயில் குறையும். இந்நிலையில், 30ம் தேதி முதல் தென் மேற்கு பருவ மழை காலம் தொடங்க உள்ளது. ஜூன் மாதத்தில் 6ம் தேதிதான் தென் மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு 5ம் தேதியே தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு 5 நாட்கள் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. இதனால் தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.