October 20, 2021

நாளை முதல் சென்னையில் மினி காஸ் சிலிண்டர் விநியோகம்!

சென்னையில் 3 பெட்ரோல் பங்க்குகளில் 5 கிலோ எடையுள்ள சிறிய காஸ் சிலிண்டர் நாளை முதல் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் ஆகிய 5 பெரு நகரங்களில் மட்டும் முதல் கட்டமாக இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது நினைவிருக்கும். இந்த சிலிண்டர் வாங்க விரும்புவோர் ரேஷன்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தை முகவரி அடையாளமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
4 - mini gas. 2
பெரும்பாலும் புதுமண தம்பதிகள், இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் உடனடியாக கிடைக்காது. அதனால், சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்களிடம் கூடுதல் விலை கொடுத்து வாங்குவார்கள். அதன்பின், புதிதாக பதிவு செய்து வழக்கமான விலையில் வாங்குவார்கள். சில சமயம் பதிவு செய்தாலும் உடனே சிலிண்டர் கிடைக்காது. இவர்களுக்காகவே பெட்ரோல் பங்க்குகள் மூலம் 5 கிலோ எடையுள்ள சிறிய காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யும் திட்டத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

இந்நிலையில் பெங்களூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, 5 கிலோ சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைக்கிறார். சென்னையில் முகப்பேரில் உள்ள பி.பி.சி.எல் பெட்ரோல் பங்க், மாதவரம் எச்.பி.சி.எல் பெட்ரோல் பங்க், அடையாறு இந்திரா நகரில் உள்ள ஐ.ஓ.சி பங்க் ஆகிய 3 இடங்களில் மட்டும் நாளை முதல் சிறிய காஸ் சிலிண்டர் கிடைக்கும். இதன் விலையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் போர்டில் எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சிலிண்டர் வாங்க விரும்புவோர் ரேஷன்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தை முகவரி அடையாளமாக சமர்ப்பிக்க வேண்டும். சிலிண்டர் கட்டணத்துடன் டிபாசிட் தொகையாக ரூ.500 செலுத்த வேண்டும். செலுத்தியவுடன் உடனடியாக சிலிண்டர் வழங்கப்படும் காஸ் விலை ரூ.504 ஆக இருக்கும் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன.