September 17, 2021

நாய்கள் குரைப்பு சத்தத்தில் இயங்கும் வாஷிங் மெஷின்! வீடியோ

உலகிலேயே மிகவும் இழிந்த பிறப்பாக நாய் கருதப்படுகிறது. நன்றியும் மோப்ப சக்தியும் காவல் கடமையும் கொண்ட நாயை கடைப்பிறப்பென்று கூறப்படுவதற்கு ஏதேனும் காரணம் உண்டா? என்றால் ஆம்! இதற்கு மூன்று காரணம் உண்டென்று கூறலாம். ஒன்று நாயானது எலும்பைக் கடிக்கும்போது நாயின் ஈறுகளிலிருந்து இரத்தம் கசியும். தனது இரத்தத்தை எலும்பிலிருந்து வருகின்ற இரத்தம் எனக் கருதும் நாய் அந்த எலும்பை விடாமல் கடித்துக்கொண்டே இருக்கும். இது ஒரு காரணம்.இரண்டாவது காரணம் நாயின் போகநிலை. உலகில் எந்த ஜீவராசிக்கும் இல்லாத துன்பத்தையும் வேதனையையும் போக சுகத்தின் பின் நாய்கள் அனுபவிக்கின்றன. அடுத்தது, இன ஒற்றுமை இல்லாமை. இந்த மூன்று காரணங்களாலும் நாயினம் கடைப்பட்டதாயிற்று. இவை நாய்பற்றிய தகவலுக்கானவை.இதற்கிடையில் அடுத்தவர் உதவி தேவையுள்ளவர்களுக்கு உதவும் விதமாக அவர்களது நாய் குரைக்கும்போதே செயல்படும் வாஷிங் மிஷின் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
Woof_to_wash
பிரிட்டானியாவைச் சேர்ந்த ஜே.ரி.எம். சேர்விஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த வாஷிங் மெஷின் நாய்கள் தமது வாயால் அதன் கதவைத் திறக்கும் வகையில் விசேஷ கைப் பிடியையும் கொண்டுள்ளது.அத்துடன் ‘ஊப் டு வாஷ்’ என்ற இந்த வாஷிங் மெஷின் நாய்களின் குரைப்புக்கு தகுந்தாற்போல் செயல்படும்திறன் உள்ள கருவியொன்றும் பொருத்தப்பட்டுள்ளது.

இயல்பாக செயல்பட முடியாத விசேஷ தேவையுள்ளவர்களுக்காக பயிற்சியளிக்கப்பட்ட நாய் இந்த சலவை இயந்திரத்தின் கதவைத் திறந்து சலவை செய்ய வேண்டிய துணிகளை உள்ளே தள்ளி, அதன் கதவை மூடி குரைத்ததும் இயந்திரம் செயல்பட ஆரம்பிக்கிறது.அத்துடன் இந்த மெஷின் தன்னிச்சையாக தேவையான அளவு நீரை பயன்படுத்தி சலவையை மேற்கொள்கின்றது என்பது சிறப்பு தகவல்..

 

https://www.youtube.com/watch?v=C1rCX-RAeIQ

Woof To Wash: The Wonderful Dog-Operated Washing Machine
*************************************************************
oof to Wash enables specially-trained dogs to work an adapted washing machine with a footpad. The machine starts with a ‘woof’. Detergent is dispensed automatically. The door is opened by pulling a rope.