September 25, 2021

“ நான் வச்சிருக்கறது அயோடின் பொட்டு.. அப்ப..நீங்க?“

இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் வசிக்கும் பெண்களிடம் அதிகம் காணப்படும் அயோடின் குறை பாட்டை போக்குவதற்காக, ஹைடெக்கான அதே சமயம் ரொம்ப ஈசியான வழிமுறையை நமது மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது அயோடின் குறைபாட்டை ஜஸ்ட் ஒரு ஸ்டிக்கர் பொட்டு வைத்து கொள்வதன் மூலமாகவே போக்கி விட முடியும் என்று உறுதிப் படுத்தி வருகிறார்கள்.
dot life
20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து உலகின் பல நாடுகளில் அயோடின் உப்பு பயன்படுத்தும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அயோடின் குறைபாட்டால் முன் கழுத்துக் கழலை நோய் ,புத்திக் கூர்மை இல்லாமல் மந்தப் போக்கு ஏற்படும். வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி இன்மை . பெண்களுக்கு பூப்பெய்வது, கருத்தரிப்பது தள்ளிப்போதல், மாதவிலக்குப் பிரச்சினைகள் ,fibrocystic breast cancer ஏற்படும் என்பது பலரும் அறிந்த விஷயம். மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைதல், குறைப் பிரசவம், எடை குறைந்த குழந்தை பிறத்தல், சிசு இறப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. இதையொட்டியே அயோடின் பற்றாக்குறையை ஈடுகட்ட உணவில் நாள்தோறும் அயோடின் கலந்த தரமான உப்பைச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதே சமயம் டெய்லி ஒரே முறையில் அயோடினைத் தூக்கி விழுங்கி விடுவதால் கொஞ்சமும் பிரயோஜனம் கிடையாது. அயோடின் கம்மி கம்மியானாலும் தொடர்ச்சியாகக் கிடைத்துக் கொண்டே இருக்கவேண்டும். இதனால்தான் அயோடின் சத்து சமையல் உப்பில் கலந்து தரப் படுகிறது. தற்போது அயோடின் supplement மற்றும் அயோடின் சேர்த்த உப்பு அனைத்தும் நகர்ப்புற மக்களுக்கு எளிதில் கிடைக்கும் ..ஆனால் கிராமப்புற மக்களுக்கு அயோடின் குறைபாடு பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை .அயோடின் உப்பு மாத்திரைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பூஜ்ஜியம் .அப்படி வழங்கப்படும் மாத்திரைகள தினமும் உண்ண மறக்கிறார்கள் பலர் .

ஆகவே சிங்கப்பூர் தன்னார்வ நிறுவனம் grey foundation மற்றும் அரசு சாரா மருத்துவ நிறுவனம் நீல் வசந்த் ஆகியவை இணைந்து உத்திர பிரதேச பகுதியில் பழங்குடி மக்களுக்கு குறிப்பா மகளிருக்கு எளிதில் அயோடின் சக்தி கிடைக்க வழி கண்டுபிடித்துள்ளார்கள் ..அதுதான்………உயிர் காக்கும் பொட்டு .

பொட்டு அணியா கிராமப்புற பெண்கள் காண்பது அரிது ..அவர்களுக்கு பிரத்யேகமாக iodine patch சேர்த்த வட்ட பொட்டுக்களை வினியோகித்துள்ளார்கள் ..ஒவ்வொரு பொட்டின் பின்பக்கம் அயோடின் சேர்க்கப்பட்டுள்ளது .அணிபவர் உடலில் தோல் வழியே உடலில் அன்றாட தேவையான 150–200 microgram அயோடின் உறியப்பட்டு சேர்ந்து விடும் ..தற்சமயம் மகளிர் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை அடிப்படையில் 30 அயோடின் பொட்டுக்களை விநியோகித்து உள்ளார்கள் ..தோலின் தன்மை ,வியர்த்தல் ஆகியவற்றை பொறுத்து இதன் உட்கிரகிக்கும் தன்மையும் இருக்கும் .குறைந்த பட்சம் 8 மணிநேரம் இப்பொட்டு அணிய வேண்டும் .கர்ப்பிணிகளும் இதனை  அணியலாம் .. இந்த பரிசோதனை வெற்றி அடைந்தால் “ நான் வச்சிருக்கறது அயோடின் பொட்டு.. அப்ப..நீங்க?“ என்று பெருமை பொங்க கேட்கும் காலம் வரலாம்