September 20, 2021

நான் திருமணமானவன் – மோடி ஓப்பன் தகவல்!

நரேந்திர மோடி தன்னை திருமணமானர் என வேட்புமனுவில் முதல்முறையாக அறிவித்துள்ளார்.மோடியின் வேட்பு மனுவில் இணைக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தை வதோதரா மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள காட்சிப் பலகையில் வைத்துள்ளதையடுத்து இது ஹாட் டாபிக்காகி உள்ளது.
modi_nomination_
சமீபத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுவில் மோடி தனது திருமண நிலை குறித்து குறிப்பிட வேண்டும் என காங்கிரஸ் கூறியிருந்தது.இந்நிலையில், குஜராத் மாநிலம் வதோதரா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோடி, நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தாம் திருமணமானவர் என்றும் தனது மனைவியின் பெயர் ஜஷோட பென் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் மனைவின் சொத்து விவரம், வருமானம் பற்றிய தகவல்கள் தனக்கு தெரியாது என வேட்பு மனுவில் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி திருமணமானதாக குறிப்பிடுவது இதுவே முதல் முறையாகும். இதுவரை, வேட்பு மனு தாக்கலின்போது இணைக்கப்படும் பிரமாணப் பத்திரத்தில் வாழ்க்கைத் துணை குறித்து எதுவும் எழுதாமல் வெற்றிடமாகவே விட்டு வந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நரேந்திர மோடி, வேட்பு மனு விண்ணப்பத்தில் திருமணம் குறித்த இடத்தை பூர்த்தி செய்யாமல் விட்டிருந்தார்.