September 29, 2021

நான் சிகப்பு மனிதன் திரை விமர்சனம்

பாண்டிய நாடு என்ற வெற்றியை அடுத்து விஷால் தயாரித்து லட்சுமி மேனடுடன் ‘நடித்து’ வெளிவந்திருக்கும் படம் நான் சிகப்பு மனிதன். லட்சுமி மேனனின் முத்தகாட்சி வேறு இருப்பதால் மிகுந்த எதிர்ப்பர்ப்புகளுக்கிடையே வெளிவந்துள்ளது இந்த படம். ஆனால் கொஞ்சம் கூட யார் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
Naan Sivappu  apr 12
சமர் படத்திற்குப் பிறகு இயக்குநர் திருவின் இயக்கத்திலும், பாண்டிய நாடு வெற்றிக்குப் பின் விஷாலின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம், நான் சிகப்பு மனிதன். தீராத விளையாட்டுப்பிள்ளையாக இருந்த விஷால் திருந்தி, பாண்டியநாட்டில் வெற்றிக்கொடி நாட்டியபின் வரும் படம் என்பதாலும், லிப் டூ லிப் கிஸ் இருக்கிறது என்பதாலும் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு. எப்படி இருந்தது கிஸ்..ச்சே..படம் என்று பார்ப்போம், வாருங்கள்.

இந்த படத்தின் கதைக்கு போகும் முன் நார்கொலாப்ஸி என்றால் என்ன என தெரிந்துகொள்வோம். இது எதுக்குனு கேட்கிறீங்களா? இருக்கு பாஸ் இந்த கதைக்கு இதுதான் முக்கியம். ஏதாவது அதிர்ச்சியான விசயம் கேட்டாலோ அல்லது அதிக அளவு உணர்ச்சிவசபட்டாலோ அல்லது சத்தம் கேட்டாலோ தன்னை அறியாமல் தூக்கம் வந்துவிடுமாம். அதாவது ஒருவித மயக்கம் என்று கூட வைத்து கொள்ளலாம். அதுதான் அந்த நோய்க்கு விளக்கம்.ஆனால் இந்த நோய்க்கு மருத்துவம் கிடையாதாம்.

சரி கதைக்கு வருவோம். அப்படி ஒரு நோய் பாதிக்கப்பட்டவ்ர்தான் விஷால். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவரை காதல் செய்கிறார் லட்சுமி மேனன். அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்பதால் லஷ்மி மேனனின் குடும்பம் இவர்கள் காதலை ஏற்க மறுக்கிறது. ஆனால் அதையும் மீறி அவர்கள் ஒன்றுசேர, ஒரு சந்தர்ப்பத்தில் லட்சுமி மேனன் ரவுடி கூட்டத்தில் மாட்டிகொள்கிறார். அப்போது அவரை காப்பற்ற முயலும் விஷால் அந்த நோயின் காரணமாக தூங்கிவிடுகிறார். அதனால் அவரை காப்பற்ற முடியாமல் போகிறது. விழித்துபார்த்தால் லட்சுமிமேனன் சுய நினைவற்ற நிலையில் இருக்கிறார். பின்னர் இந்த செயலுக்கு காரணமான ரவுடி கூட்டத்தை தன் நோயின் தாக்கத்தையும் மீறி எப்படி பழி வாங்குகிறார் என்பதுதன் மீதி கதை.

ரஜினியின் நடித்த வெளிவந்த நான் சிகப்பு மனிதன் படத்தின் அடிப்படை கதையில் குடும்பத்தையே கொன்று தங்கையை கேங் ரேப் செய்தவர்களை கண்டு பிடிப்பதுதான். அப்படத்தின் அதே. ஆனால் ஒரே ஒரு வித்யாசம் நார்கோலப்ஸி.

படம் ஆரம்பம் ஆனதும் விஷால் நண்பர்களுடன் ஒரு துப்பாக்கி விலைக்கு வாங்குகிறார். அப்போது தொடங்கும் வேகம் முதல் பாதி முழுவதும் தொடர்கிறது. லட்சுமிமேனன் காதல்,ஜெகன் காமெடி என பட்டையை கிளப்புது.இடைவேளைக்கு பின் படத்தின் வேகம் வழவழதான்…. ரவுடி கூட்டத்தை தேடும் விஷால் எப்படியோ ஒரு ரவுடியின் பெயரை தெரிந்து அவன் மூலம் ரவுடி தலைவன் யார் என்பது தெரியவருகிறது. எதற்காக அந்த ரவுடி இவ்வாறு செய்கிறார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் உண்டு( இருக்கனுமே). கடைசியாக வில்லன்களை பழி தீர்த்தாரா என்பதை தியேட்டரில் போய் பாருங்க…

விஷால் பொருத்தவரை அவருடை நடிப்பில் இந்த படமும் நல்ல பெயரை கொடுக்கும் என்பது உண்மை. பாண்டியநாடு போன்றே பஞ்ச் டயலாக்,ஹீரோயிசம் இல்லாம பண்ணிருக்கார். நார்கொலாப்ஸி நோயால் பாதிக்கப்பட்டவராக அவர் நடிப்பு அருமை. இவரின் தூக்க வியாதியினால் ரோட்டில் தூங்கிவிட, விஷாலை அநாதை பிணம் என்று மயில்சாமி செய்யும் அலப்பறை அட்டகாசம். விஷாலின் நண்பனாய் வரும் சுந்தர்ராமிற்கு இது முக்கிய படம். அவரின் மனைவியாய் இனியா.. இவர்களின் பிளாஷ்பேக் அழுத்தம். ஆனால் அந்த பிளஷ்பேக் காட்சியை பெண்கள் முகம் சுழிப்பார்கள் என்றே தோன்றுகிறது.இனியா சில காட்சிகளில் வந்துட்டு போராங்க. அது ஏன் அவருக்கு சென்னையில் ஒருநாள் படத்தில் வரும் ஆதே வேடம் கொடுத்தாங்கனு தெரியல. ஆனாலும் தனது பணியை சரியாக பண்ணிருக்காங்க.

லட்சுமிமேனன் இதில் நகரத்து பெண்ணாக வருகிறார். முதல்பாதி முழுவதும் கலக்குகிறார். முத்தக்காட்சியில் அசத்துகிறார்.ஆனால் அது ஆபாசமாக தெரியவில்லை. நிச்சயம் கதைக்கு தேவைப்பட்டே இந்த காட்சி வைத்திருப்பது புரிகிறது. அதிலும் ஒரு பாடல்காட்சியில் ரொமான்ஸாக ஆடுகிறார்.ஆனால் பார்க்கத்தான் முடியல. இரண்டாம் பாதியில் கோமா நிலைக்கு போனதால் அவருக்கு வேலை இல்லை. ஜெகன் காமெடி ரசிக்கவைக்கிறது.ஒளிப்பதிவு ரிச்சர்ட் கே. நாதன். அவரின் உழைப்பு பல இடங்களில் தெரிகிறது.

இசை ஜி.வி.பிரகாஷ்குமார்..பாடல்கள் பரவாயில்லை ரகம்.குறிப்பிட்டு சொல்லவேண்டுமானாம் பெண்ணே பாடல் அருமை. படத்தினை இய்க்கியிருப்பவர் திரு. தீராத விளையாட்டு பிள்ளை,சமர் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக விஷாலுடன் இணைந்திருக்கிறார். சமர் படத்தில் வரும் திரைக்கதை டெம்பேள்ட்டில் இப்படத்தையும் கொடுத்திருக்கிறார். அதிலும் நீருக்கு அடியில் கசமுசா செய்து கர்ப்பமாவது எல்லாம் ஓவர் டைரக்டரே.முதல்பாதியில் வெற்றி பெற்ற அவர் இரண்டாம் பாதியில் சாறுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஆக நான் சிகப்பு மனிதன் முதல் பாதி கலக்கல்..இரண்டாம்பாதி சறுக்கல்…

நன்றி : சினிபஜார் டாட் நெட்(http://www.cinebazaar.net)