February 4, 2023

நான் எம். ஜி. ஆரோ ., ஜெ.,வோ இல்லைதான்.. ஆனா சூப்பர்மேன்யா – எடப்பாடி பெருமிதம்!

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் இறங்கி உள்ளன. கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிக சீட்டு கேட்டு மிரட்டி வருகின்றன. இதற்காக சிபிஐ கைது, ஐடி ரெய்டு போன்ற நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டு விட்டன. இந்த பரபரப்பான நிலையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதலில் காலை 8.30 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 8.30 மணி முதல் 10 மணி வரை ராகு காலம் என்பதால் காலை 10.30 மணிக்குதான் செயற்குழு கூட்டம் தொடங்கியது.

கூட்டத்திற்கு வந்த முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்க கோயம்பேடு பேருந்து நிலையம் முதல் திருமண மண்டபம் வரை போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. சாலைகளின் ஓரத்தில் எம்ஜிஆர் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது. மேலும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மண்டபத்தை சுற்றி டன் கணக்கிலான பழங்களை கொண்டு அலங்காரம் ெசய்யப்பட்டு இருந்தது. காலை 8.30 மணி முதல் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 3500 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். அழைப்பிதழ் உடன் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வந்த உறுப்பினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதில் 200 க்கு மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்கள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர் என சுமார் 3.500 பேர் கலந்து கொண்டனர்.

இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு அங்கீகாரம் மற்றும் அதிகாரம் என்னென்ன என்பதும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி அதிமுக வழிகாட்டுதல் குழுவில் அதிகபட்சம் 11 பேர் மட்டுமே இடம் பெற வேண்டும்; வழிகாட்டுதல் குழுவில் உள்ள 11 பேரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கி ணைப்பாளர் மட்டுமே நியமிக்கவோ, நீக்கவோ முடியும். 11 பேர் கொண்ட வழி காட்டுதல் குழுவின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். 11 பேர் 5 ஆண்டுகளை நிறைவு செய்த பின்னர், மீண்டும் அதே பொறுப்புக்கு நியமிக்க தடை ஏதுமில்லை. கட்சியின் வளர்ச்சிக்கு ஆலோசனை கள் வழங்குதல் கொள்கைகள் வடிவமைத்தல், ஆகியவை வழிகாட்டுதல் குழுவின் பணி களாகும். 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், ஆர்.காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ ஏ.சி.டி பிரபாகர், முன்னாள் எம்.பி பி.எச் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் பா.மோகன், முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் உள்ளனர்.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். வரும் சட்டமன்ற தேர்தல் மூலமாக வாரிசு அரசியலை முறியடிக்க வேண்டும்.தமிழகத்தை ஆளக் கூடியத் தகுதி அதிமுகவுக்கு உள்ளது என்ற நற்சான்றிதழை மக்கள் கொடுத்துள்ளனர்.

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் திறக்க உள்ளோம். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல. ஆனால், கட்சி கொடுத்த பணியை சிறப்பாக செய்து கொண்டிருப்பதாக நம்புகிறேன். 4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக நான் நம்புகிறேன்’ என்றார்.

இன்று நடந்த அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதிமுக வெளியிட்ட பட்டியல் இதோ: