October 19, 2021

“நானும் கட்சி அரம்பிச்சிட்டேனே!” கூடங்குளம் உதயகுமார் அறிவிப்பு

“போராடும் மக்களுக்கிருக்கும் ஒரே வழி அரசியல் அதிகாரத்தை ஏற்றெடுப்பதுதான். வெறுமனே முழக் கம் எழுப்பிக் கொண்டும், விண்ணப்பம் கொடுத்துக் கொண்டும் இராமல், மக்களை அரசியல் படுத்துவ தும், முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும்தான் ஒரே வழியாக இருக்கிறது” என்று கூறி யிருந்த கூடங்குளம் அணு உலை எதிர்பாளர் குழு தலைவர் சுப ..உதயகுமாரன், அதன்படி இன்று புதியக் கட்சியை தொடங்கி வைத்து பேசும் போது “படித்தவர்களுக்கு வேலையில்லை.வேலையில் லாததால் வருமானமில்லை. இளைஞர்கள் எல்லாம் விரக்தியான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். வருங்காலமும் இருண்டு கிடக்கிறது.இதை அப்படியே விட்டு விடக்கூடாது. அடுத்தத் தலை முறையை நாம் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பச்சைத் தமிழகம் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிக்கிறோம்.“வளம், வாழ்க்கை, வருங்காலம்”, என்ற அடிப்படையில் அரசியலை முன்னெடுக்க லாம் என நினைக்கிறோம்.’பச்சைத் தமிழகம்’ பெயர் குறிப்பிடுவது போல பசுமை அரசியலை நாங் கள் முன்னெடுக்கிறோம். இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. வாழ்வாதாரங்கள் சிதைக்கப் படுகின்றன. நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் செத்து மிதப்பதை பார்க்கிறோம்.நீர் ஆதாரங்கள் அழிக் கப்பட்டிருக்கின்றன. நம்மிடம் உள்ள நீர் ஆதாரங்களை பாதுகாக்கத் தவறி அண்டை மாநிலங் களிடம் தண்ணீர் கேட்கிறோம். லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுகின்றன. வருங்காலத்தினரிடையே புதிய நம்பிக்கையை, ரத்தத்தை பாய்ச்சுவதுதான் ‘பச்சைத் தமிழகம்’”என்றார்
pachai tamilagam 1
மேலும் ’பச்சைத் தமிழகம்’ கட்சியின் தனித்துவம் என்ன? எதற்காக இந்த அரசியல் கட்சி?தமிழகத் தில், மக்களுக்கு பாதிப்பில்லாத வளர்ச்சி, இயற்கைக்கு கேடு விளைவிக்காத திட்டங்கள், அணு சக்தி இல்லாத தமிழகத்தை முன்னெடுக்க 18-ஆம் தேதி கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியும் சமூக போராளியுமான சுப.உதயகுமார் தலைமையில் ’பச்சைத் தமிழகம்’ என்னும் அரசியல் கட்சி சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் தொடங்கப்பட்டது.இந்த கட்சியில் உள்ளவர்களுக்கு 10 கட்டளைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

1. கட்சிக்கு நிதி திரட்டும் போது பன்னாட்டு நிறுவன முதலாளிகளிடம் நிதி கேட்க கூடாது. திரட்டப்படும் நிதிக்கு உரிய முறையில் கணக்கை காட்ட வேண்டும்.

2. இயக்கத்தில் யாருடைய பெயருடனும் எந்த விதமான பட்டங்களையும் சேர்த்து அழைக்கக் கூடாது. திரு, தோழர், அண்ணன், அக்கா, தம்பி, தங்கை ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

3.பொன்னாடைகள், ஆளுயர மலர் மாலைகள், மலர்கிரீடம், செங்கோல், பணமாலைகள் யாரும் அணிவிக்கக் கூடாது. புத்தகங்கள், கைத்தறித் துண்டுகள் வழங்கலாம்.

4. தனிப்பட்ட தலைவர்களுக்கு பிரம்மாண்ட ‘கட்-அவுட்’ வைக்கக் கூடாது. சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த சிறிய பதாகைகளை வைக்கலாம்.

5. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொடிக்கம்பங்கள் வைக்கக் கூடாது. தனிப்பட்ட தலைவருக்கு சிலைகள் வைக்கக் கூடாது.

6. பொதுச்சுவர்களிலோ, அரசு கட்டடங்களிலோ சுவர் விளம்பரங்கள் வைக்கக் கூடாது. சமூக வலைத்தளங்கள், நேரடியாக மக்களை சந்தித்து கருத்துக்களை பரப்ப வேண்டும்.

7. பணம், பிரியாணி, மது ஆகியவற்றை கொடுத்து, மக்களை ஏமாற்றி அரசியல் செய்யக் கூடாது.

8. பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை சமமாக பார்க்க வேண்டும். சாதி, மத வேற்றுமை பார்க்கக் கூடாது.

9. போதைப் பொருட்கள், கட்டப்பஞ்சாயத்து, சூதாட்டம், வன்முறை, கட்டாய நிதி வசூல் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது.

10. பதவி, புகழ், பணம் ஆகியவற்றுக்காக அல்லாமல் மக்கள் சேவை செய்ய வேண்டும்” என கூறினார்.