நாட்டின் 58 சதவீத பகுதிகளில் வழக்கமான மழை அளவு!

இந்தியா முழுவதும் கடந்த 2 மாதத்தில் சராசரியாக 58 சதவீத பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதில் 13 சதவீத இடங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இதில் 29 சதவீத இடங்களில் குறைந்த அளவே மழை பெய்துள்ள தாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
rain aug 24
கடந்த 2 மாதங்களில் நாடு முழுவதும் பெய்த பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், “நாட்டில் மொத்தம் உள்ள 36 துணை வட்டார பகுதிகளில் தமிழ்நாடு, புதுச் சேரி, கடலோர ஆந்திரா, கிழக்கு ராஜஸ்தான், கிழக்கு மத்திய பிரதேசம், உட்புற கர்நாடகா, பீகார், உத்தர காண்ட், ஒடிசா, குஜராத் உள்ளிட்ட 20 துணை வட்டாரங்களில் வழக்கமான பருவ மழை பெய்து இருக்கிறது. இது நாட்டின் 58 சதவீத பகுதி ஆகும்.

தெற்கு தீபகற்பம், கடலோர கர்நாடகா, ஆந்திராவின் ராயலசீமா, தெலுங்கானா மற்றும் மத்திய இந்தியா உள்பட 13 துணை வட்டாரங்களில் (நாட்டின் 29 சதவீத பகுதிகள்) போதிய பருவ மழை இல்லை. மேற்கு கங்கைப் பகுதி, மேற்கு ராஜஸ்தான், மேற்கு மத்திய பிரதேசம் ஆகிய 3 துணை வட்டாரப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக சதவீத மழை பதிவாகி இருக்கிறது. நாட்டின் 13 சதவீத பகுதிகளில் கூடுதல் பருவ மழை பெய்துள்ளது.ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் பருவமழை பற்றாக்குறை 12 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.