October 19, 2021

நாடெங்கும் டீ கடை நடத்தி ஆதரவு! – பா. ஜ. க.வின் அதிரடித் திட்டம்!

ஒரு டீ வியாபாரி இந்த நாட்டை ஆள முடியுமா என காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் மோடியை கேலி செய்தன. இதற்கு பதில் அளித்த மோடி ”நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவன்தான். ஒரு ஏழை தாயின் வயிற்றில் பிறந்தவர் நாட்டை ஆள வந்து விடுவாரோ என அஞ்சுகின்றனர். நாங்கள் டீ தான் விற்றோம்.இந்த நாட்டை விற்கவில்லை” என்று பல கூட்டங்களில் விளக்கம் அளித்து வருகிறார். இந்நிலையில் வரும் தேர்தலில் மோடியை ஆதரிக்க கேட்டு, 300 நகரங்களில், ஆயிரம் இடங்களில பல கட்டமாக டீ விற்கும் கடை துவக்கி இதன் மூலம் மக்களிடம் பா.ஜ., அரசுக்கு வர வேண்டிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரம் செய்யவிருப்பதாக பா.ஜ., எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இன்று அறிவித்துள்ளார்.
tea-vendors-bjp-
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ்,” மக்களைச் சென்றடைவதில் பாஜக எப்போதுமே புதிய பாணிகளைக் கையாள்வதாக மக்கள் கூறுகின்றனர். துவக்கத்தில் அத்வானியின் ரத யாத்திரைகள் மூலம் மக்களைச் சென்றடைந்தோம்.இதையடுத்து விரைவில் வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ‘சாய் பர் சர்ச்சா’ என்ற டீக்கடைப் பேச்சு பாணியிலான நிகழ்ச்சிகளை நடத்தப் போகிறோம். இது இதற்கு முன்னர் யாராலும் முயற்சி செய்து பார்க்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க இந்திய பாணி நடைமுறைதான். வரும் பிப்ரவரி 12ம் தேதி முதல், பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, நாடு முழுவதுமான இந்த பாணி பிரசாரத்தைத் துவங்கவுள்ளார்.

இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. டீக்கடை நிறுத்தங்கள் வாயிலாக 10-15 சுற்று பிரசாரம் மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம். ஒவ்வொரு 5 நாட்களிலும் ஒரு முறை சாய் சர்ச்சா – டீக்கடை நிறுத்த விவாத நிகழ்ச்சியை நடத்துவோம். இதன் மூலம் சுமார் 2 கோடி மக்களைச் சென்று சந்திக்கவுள்ளோம். இந்தக் கூட்டம் மூன்று பிரிவுகளை உள்ளடக்கியிருக்கும். முதலில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது, பேசுவது அடுத்தது ஆலோசனை வழங்குவது என மூன்று கட்டங்களாக இந்த நிகழ்ச்சிகள் நடக்கும்.மேலும் இந்த பிரசாரம் தொடர்பாக மக்கள் தங்களின் கருத்துக்களை போன் மற்றும் சமூக வலைதளம் மூலம் கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கலாம். இந்த பிரசாரத்தின் மூலம் சுமார் 2 கோடி பேரை சந்திக்க வாய்ப்பு ஏற்படும். இந்த பிரசாரம் பா.ஜ., வுக்கு பெரும் செல்வாக்கை தரும்”என்று சுஷ்மா தெரிவித்தார்.

Modi’s tea stall campaign to start from Feb 12
****************************************************************
The Bharatiya Janata Party on Tuesday said that it’s prime ministerial candidate Narendra Modi will launch a nationwide “chai pe charcha” campaign on February 12 ahead of the 2014 Lok Sabha elections.Sushma Swaraj told reporters that Modi will hold “chai chaupals” at various locations as part of their new campaign and 10-15 rounds of chai stops have been planned in 1,000 locations across India to spread BJP’s message.