September 20, 2021

நாடு முழுவதும் நடந்த வேலை நிறுத்தத்தால் ரூ 25 ஆயிரம் கோடி இழப்பு!

தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளத்தை ரூ.15 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும், அதிக ஓய்வூதியம் வழங்குவதை உறுதி செய்யவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யக் கூடாது, போனஸ் மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றுக்கான உச்சவரம்பை நீக்கவேண்டும், விண்ணப்பித்த 45 நாட்களில் தொழிற்சாலைகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி
ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கங்கள் நேற்று -செப்டம்பர் மாதம் 2–ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. இதையேற்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தன. வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசு விடுத்த கோரிக்கையை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.
national strike
இந்த பொது வேலை நிறுத்தத்தில் பொதுத்துறை வங்கி ஊழியர்களும் கலந்து கொள்வது என பல்வேறு பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தீர்மானித்து இருந்தனர்.இடது சாரிகளின் செல்வாக்கு மிகுந்த மேற்கு வங்காளம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பொது வேலைநிறுத்தம் காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியது. பெரும்பாலான மாநிலங்களில் பஸ் போக்குவரத்து, வங்கிச் சேவைகள், மற்றும் இதர சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

23 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் வங்கிகள், 52 வட்டார கிராமப்புற வங்கிகள், மற்றும் 13 ஆயிரம் கூட்டுறவு சங்க வங்கிகளின் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நாடு முழுவதும் வங்கிகளில் பண பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கின.மொத்தமுள்ள சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்களில் 5 லட்சம் பேர்வரை இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர் என்று அகில இந்திய வங்கிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் தெரிவித்தார்.

இந்த வேலை நிறுத்தத்தின்போது தேசிய தலைநகர் டெல்லி, மேற்கு வங்காளம் மற்றும் நாட்டின் ஒரு சில இடங்களில் போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களும், போராட்டத்தை புறக்கணித்த தொழிற்சங்கத்தினரும் மோதிக் கொண்ட சம்பவங்கள் நடந்தன. டெல்லியில், வேலைநிறுத்தம் காரணமாக 90 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்களும், 15 ஆயிரம் வாடகை கார்களும் ஓடவில்லை.

மேற்கு வங்காளத்தில் தலைநகர் கொல்கத்தா உள்பட பல்வேறு நகரங்களில் பெரும்பாலான வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. பல பகுதிகளில் அரசு பஸ்கள் ஓடாததால் போக்குவரத்து முடங்கியது. நகரில் பல இடங்களில் ரெயில் மறியலும் நடந்தது. இதனால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. முர்ஷிதாபாத் நகரில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இடது சாரி தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.

கேரளாவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் எதையும் சாலைகளில் பார்க்க முடியவில்லை. தனியார் கார் மற்றும் 2 சக்கர வாகனங்கள் மட்டுமே ஓடின. தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டு இருந்தன. சிறிய டீக்கடைகள் கூட திறக்கப்படவில்லை.

திரிபுரா மாநிலத்திலும் சாலைகளில் வாகனங்கள் ஓடவில்லை. வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டு இருந்தன. அரசு அலுவலகங்களில் குறைவான ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர்.இதே போல கர்நாடகம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், சண்டிகார், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பிடத்தக்கது