October 16, 2021

நாடாளுமன்றத்தில் 2 நாளில் மக்கள் வரிப்பணம் ரூ.6.75 கோடி வீண்!

தமிழக மீனவர் பிரச்சினை, தெலங்கானா பிரச்சினை ஆகியவற்றை முன் வைத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 2-வது நாளாக முக்கிய அலுவல்கள் ஏதும் முடிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த இரண்டு தினங்கள் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கியதால் மக்கள் வரிப்பணம் ரூ.6,75கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் செயல்படுவதற்கு ஒரு நிமிடத்திற்கு 2.5 லட்சம் செலவாகிவருவது குறிப்பிடத்தக்கது.
Parliament in Session
இன்று காலை மக்களவை கூடியவுடன், ஒன்றுபட்ட ஆந்திரம் கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை நோக்கி குவிந்தனர். இதே போல், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் அவையை முதலில் பகல் 12 மணி வரைக்கு ஒத்தி வைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். மீண்டும் அவை 12 மணிக்கு கூடிய போதும் அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 2-வது நாளாக மக்களவை, உறுப்பினர்கள் அமளியால் முடங்கியுள்ளது.இப்படி பதினைந்து நிமிடத்தில் நாடாளுமன்றம் முடங்கியதால் மக்கள் வரிப்பணம் ரூ.6.75கோடி இரண்டு நாளில் வீணாகியுள்ளது