September 27, 2021

நர்ஸ் அருணாவின் உயிர் பிரிந்தது ! 42 ஆண்டுகள் கோமா- ஃபிளாஷ் பேக் ரிப்போர்ட்!

மும்பையில் கிங் எட்வர்டு ஹாஸ்பிட்டலில் நர்ஸாக பணிபுரிந்துவந்த அருணா ஷான்பாகை 1973-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி இரவு அங்கு வார்டு பாயாக பணிபுரிந்த பார்த்தா வால்மீகி என்பவர் கடுமையாகத் தாக்கினான். பின்னர் அவரை மருத்துவமனையிலேயே பாலியல் பலாத்காரம் செய்தான். இந்த சம்பவத்தால் அருணா கோமா நிலைக்கு சென்றார். அதுவும் 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை நர்ஸ் அருணா ஷான்பாக்கின் உயிர் இன்று பிரிந்து விட்டது. அவரது மறைவுக்கு மராட்டிய ஆளுநர் வித்தயாசாகர் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
mumbai aruna 1
இது குறித்து ஆளுநர் தனது இரங்கல் செய்தியில்,”அவரது மறைவு குறித்து செய்திகள் வெளியாயின. அவரது மறைவு மிகவும் மன வருத்தத்தை தருகிறது. ஒரு குடும்ப உறுப்பினரை இழந்தது போல இருக்கிறது.

மிருகதனமான தாக்குதலால் கடந்த 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த அருணா ஷான்பா ஒரு உணர்வற்ற நிலையில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது ஆன்மா நித்திய ஓய்வு பெறட்டும்.”என்று தெரிவித்துள்ளார்.

இந்த நர்ஸ் அருணாவின் ஃபிளாஷ் பேக் ரிப்போர்ட் இதுதான்:

சரியாக 45-வருடங்களுக்கு முன்பு மும்பையில் இருக்கும் கே.இ.எம் மருத்துவமனையில் [King Edward VII memorial hospital]அருணா ஷான்பெக் நர்ஸ் வேலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து மும்பைக்கு செல்கிறாள். மருத்துவமனையில் இருக்கும் ஆய்வு கூடத்தில் ´அருணா ஷான்பெக்´கிற்கு வேலை. அதே ஆய்வுகூடத்தில், சோகன் லால் பாரத வால்மீகி´ என்பவன் வார்ட் பாயாக வேலை செய்கிறான். அருணா ஷான்பெக் வருவதற்கு முன்பிருந்தே ஆய்வு கூடத்திற்கு சொந்தமான உணவு பொருட்களில் இருந்து திருடும் வழக்கம் அந்த வார்டு பாய்க்கு இருந்திருக்கிறது.

அருணா ஷான்பெக் வேலைக்கு வந்தபின் வால்மீகி திருட்டை கண்டித்திருக்கிறாள். ஆனாலும் வால்மீகி திருடுவதை நிறுத்தவில்லை. இதற்கிடையே அருணா ஷான்பெக்கிற்கும், அதே மருத்துவமனையில் வேலை செய்யும் ஒரு டாக்டருக்கும் காதல் ஏற்படுகிறது. அப்போது வால்மீகி திருட்டு குறித்து தன் காதலனிடம் பலமுறை சொல்லி இருக்கிறாள் அருணா ஷான்பெக். “அவன் ஏதாவது செய்துவிட்டு போகட்டும். அவன் விஷயத்தில் தலையிடாதே!” என தடுத்திருக்கிறார் டாக்டர் காதலன்.

இதனால் அருணா ஷான்பெக் மீது கடும் கோபத்திலிருந்த வால்மீகிக்குள் பழிவாங்கும் உணர்வு வெறித்தனமாக இருந்தது. அதற்கான சந்தர்ப்பம் 27.11.1973-இல் அமைந்தது. அன்று பணியை முடிந்ததும் அருணா , தன்னுடைய நர்ஸ் உடையை மாற்றுவதற்காக மருத்துவமனையின் பேஸ்மெண்ட் பகுதிக்கு போன போது அவளுக்கு தெரியாமல் உள்ளே மறைந்திருந்த வால்மீகி அவளின் கழுத்தை இறுக்கி கீழே தள்ளி மூர்க்கத்துடன் பாலியல் பலாத்தாரம் செய்துவிட்டு அவள் உடலில் இருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான். மாலை நேரத்தில் இச்சம்பவம் நடந்தது
mumbai aruna 2
அதற்கு பிறகு நடந்த கொடூரங்கள் தான் கொடுமையானவை.

மயங்கிக் கிடந்த அருணா சான்பெக்கை உடன் பணிபுரிந்த நர்ஸுகள் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். என்ன நடந்ததென்று சரியாக ஊகிக்க முடியாவிட்டாலும் அருணாவை பரிசோதித்த டாக்டர்கள் கழுத்து நெறிக்கப்பட்டதால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று கண்டுபிடித்தனர். ஓரிரு நாட்களில் ´அருணா´வுக்கு நினைவு திரும்பக் கூடும் என நம்பினர். ஆனால் சில நாட்கள் பல நாட்களாக சென்று ஆண்டுக்கணக்கில் ஓடி இன்று 42-வது ஆண்டாகி விட்டது.

ஆண்கள் குரல் கேட்டால் மட்டும் உடல் நடுங்குவதாக சொல்லப்பட்டதால் நர்ஸுகள் தயவில்
42-ஆண்டுகளாக அருணா என்ற உடல் மூச்சு விட்டபடி இருந்தது.

அருணாவை பாலியல் பலாத்காரம் செய்து கோமா ஸ்டேஜ் அளவுக்கு பலாத்காரத்தை காட்டிய ´வால்மீகி மீது பாலியல் எதுவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. ஜஸ்ட் திருட்டு குற்றச்சாட்டு மட்டுமே பதிவு செய்யப்பட்டு 7-வருடங்கள் மட்டுமே சிறையில் இருந்தான். விசித்திரமான இக்கொடுமையான சம்பவத்தைக் குறித்து நடந்தது என்ன என்று 1973-இல் மும்பை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பல நாளிதழ்கள் பக்கம் பக்கமாக அருணா ஷான்பெக் பற்றி எழுதியது. படிக்கும் வாசகர்களுக்கு எளிதில் மறக்க முடியாத சம்பவமாக இருந்தது.

இதையடுத்து பெண் எழுத்தாளரான ´பிங்கி விரானி´க்குள் அருணா சான்பெக் சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தியது. உண்மையில் நடந்தது என்ன என்று விசாரணையில் இறங்கி.அருணா குடும்பத்தினர், நண்பர்கள், தெரிந்தவர்கள், வால்மீகி, டாக்டர் காதலன் என அனைவரையும் சந்தித்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பல தகவல்களை தொகுத்து ஒரு புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

மேலும் இதே பிங்கி விரானி, சுப்ரீம் கோர்ட்டில் அருணா ஷான்பெக்கை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு வழக்கு தொடுத்தார்.அதற்கு சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்ட நிலையில் நிலையில் இன்று இறைவன் அவள் உயிரைப் பறித்துக் கொண்டான்,

வீடியோ ரிப்போர்ட் :