September 17, 2021

நயன்தாராவிடம் சிம்பு ‘கால்ஷீட்’ கேட்க வேண்டிய அவசியம் இல்லை! – டி ஆர் புகார்

வாலு படத்தின் ரிலீஸிற்கு பிறகு சிம்பு தற்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். ஆனால், அதற்குள் மீண்டும் ஒரு சர்ச்சை அவர் ரூபத்தில் தலைத்தூக்கி விட்டது. டி.ஆர் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படம் கிட்டத்தட்ட 90% முடிந்து விட்டது. ஆனால், கடைசி ஒரு சில காட்சிகளுடன் இரு பாடல்களில் நடிக்க நயன்தாரா கால்ஷீட் இல்லையாம், இதனால், அவருக்கு சில சம்பள பாக்கியும் உள்ளதால், இனி இது நம்ம ஆளு படத்திற்கு கால்ஷீட்டே இல்லை என கூறி மறுத்து விட்டாராம். இதனிடையே இது நம்ம ஆளு’ படத்தில் பாக்கியுள்ள 2 பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்துத்தர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் செய்து இருக்கிறார்.
ithu namma alu
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி.ராஜேந்தர் கொடுத்துள்ள புகாரில்,”என் மகன் சிம்புவும், நயன்தாரா வும் ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவீத தொகையை கொடுத்து விட்டேன். மீதி 25 சதவீத சம்பளம் மட்டுமே அவருக்கு பாக்கி இருக்கிறது.

‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நயன்தாரா வின் மானேஜரிடம் பேசினோம். இம்மாதம் (செப்டம்பர்) ஐந்து நாட்களும், அடுத்த மாதம் (அக்டோபர்) ஐந்து நாட்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டோம். அதற்கு நயன்தாரா மறுக்கிறார்.

பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்ததும், அவருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்து விடுகிறோம். நயன்தாரா ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துத்தர தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும். நயன்தாரா விடம், சிம்பு ‘கால்ஷீட்’ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த படத்தைப் பொருத்தவரை சிம்பு நடிகர்தான். அவர் மீது வதந்தியை பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.”என்று அந்த புகாரில் டி.ராஜேந்தர் கூறியிருக்கிறார்.இந்த புகாரின் நகல், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.