February 7, 2023

நம்ம கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு வருட சம்பள ஒப்பந்த பட்டியல் இதுதான்!

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் தகுதிகளை வைத்து அவர்களை ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக பிரித்து ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யும். ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு ரூ.1 கோடி சம்பளமும், ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு ரூ.50 லட்சமும், ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள வர்களுக்கு ரூ.25 லட்சமும் சம்பளமாக வழங்கப்படும்.
criket nov 11
கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் ‘ஏ’ பிரிவில் டோனி, விராட் கோலி, அஸ்வின், ரெய்னா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தற்போது 2015-16ம் ஆண்டிற்கான ஒப்பந்தத்தில் ‘ஏ’ பிரிவில் இருந்து ரெய்னா, புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நால்வரும், 11 பேர் கொண்ட அணியில் இடம்பிடிக்க முடியாமல் பெவிலியனில் உட்கார்ந்திருந்தாலும், இந்த சம்பளம் ஒரு வருடத்திற்கு வந்து சேரும். மேலும், ஏ பிரிவில் உள்ளவர்களுக்கு, ஒரு ஒருநாள் போட்டியில் விளையாட சுமார் 3 லட்சம் ரூபாய் சம்பளம். ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட 5 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படும்.

இதுபோக டெஸ்ட் போட்டியில் ஐ.சி.சி. தரவரிசையில முதல் மூன்று இடத்திற்குள் இருக்கும் அணியை வீழ்த்தி னால் கூடுதலாக 50 சதவீத சம்பளம் போனஸாக கிடைக்கும். டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் 100 சதவீதம் கூடுதலாக கிடைக்கும். ஒருநாள் போட்டியில் உலகக்கோப்பையை வென்றால் 300 சதவீதம் கூடுதலாக கிடைக்கும். அத்துடன் டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தால் ரூபாய் ஐந்து லட்சமும், இரட்டை சதம் அடித்தால் ரூ.7 லட்சமும் போனசாக கிடைக்கும்.பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ரூபாய் ஐந்து லட்சமும், டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வீழ்த்தினால் ரூ.7 லட்சமும் போனசாக கிடைக்கும்.

‘பி’ பிரிவில் ரெய்னா, அம்பதி ராயுடு, ரோகித் சர்மா, முரளி விஜய், தவான், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, புஜாரா, முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு, டெஸ்ட் போட்டி யில் விளையாட மூன்று லட்சமும், ஒருநாள் போட்டியில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக கிடைக்கும்.

‘சி’ பிரிவில் ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், அரவிந்த், அமித் மிஸ்ரா, அக்சர் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி, விருதிமான் சாஹா, மோகித் ஷர்மா, வருண் ஆரோன், கரன் ஷர்மா, கே.எல்.ராகுல், தவல் குல்கர்ணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு, ஒருநாள் போட்டிக்கு ஒரு லட்சமும், டெஸ்ட் போட்டிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படும்.