September 26, 2021

நம்ம இந்திய ஏடிஎம் மிஷினில் கோல்ட் காயின் சேல்ஸ் !

இன்றைய இந்திய மக்கள் தொகையில் சரிபாதி அளவுக்கும் அதிகமாக மக்கள் வங்கியில் டெபிட் கார்டினை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் பண பரிவர்த்தகம் எளிதில் நடக்கின்றது. வங்கியின் நீண்ட நேர கியூவில் நின்று பணமெடுப்பதோ அல்லது மாற்றம் செய்வது அல்லது டெபாசிட் செய்வதோ இன்று ‘அந்தக் கால’ சேதியாகிவிட்டது.

gold nov 1

எதற்கெடுத்தாலும் ஏடிஎம் மெஷின் என்றாகி விட்டது. இப்போதெல்லாம் பீட்சா வாங்கக்கூட ஏடிஎம்– தான் தேவைப்படுகிறது என்பது ஏற்கெனவே தெரிந்த தகவல்தான் . இந்நிலையில் இந்தியாவில் முதன் முறையாக ஏ.டி.எம் இயந்திரம் மூலம் தங்க நாணயங்கள் பெறும் வசதி தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் நகை விற்பனை செய்யும் புளூஸ்டோன் நிறுவனம் தற்போது இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் செலக்ட் சிட்டி வாக் மால் மற்றும் பெங்களூர் ஃபோரம் மால் ஆகிய இடங்களில் தொடங்கியுள்ளது.

இந்த ஏ.டி.எம் இயந்திரத்தின் மூலம் ஓன்று, இரண்டு, ஐந்து, பத்து மற்றும் 20 கிராம் வரையிலான 24 காரட் தங்க நாணயங்களை மார்கெட் விலை நிலவரத்திற்கே வாங்க முடியும். அதற்கான தொகையினை பணமாகவோ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவோ செலுத்தலாம். நகையின் தரத்தை உறுதி செய்யும் ரசீதையும் இந்த இயந்திரம் வெளியிடுகிறது.