September 17, 2021

நமமை போலவே செயல்படும் ரோபோக்கள் தயார்!

உலகில் ரோபோட் என்றழைக்கப்படும் முதல் இயந்திர மனிதன் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1968-இல் பிறந்தான்.வீட்டு வேலை செய்யும் சிறிய ரோபோ என்னும் இயந்திர மனிதனின் உயரம் மூன்றடி. எடை – இருபத்தி இரண்டரை கிலோ ஆகும்.போலீஸ் ரோபோ என்ற ஒன்று உண்டு. அதன் எடை 87 கிலோ. உயரம் ஒன்றரை மீட்டர். பெயர் ஞடஈ-2.மனிதனுக்கு உள்ள அத்தனை உறுப்புக்களையும் கொண்ட ரோபோவுக்கு “லெனின் கிரேடு’ என்று பெயர். இது ரோபோ இயல் மற்றும் பொறியியல் சைபர்னடிக்ஸ் கழகத்தில் உள்ளது.அயர்லாந்து அருகே அட்லாண்டிக் கடலில் ஏர்இந்தியா ஜெட் விமானம் வெடித்துச் சிதறியபோது கடலில் மூழ்கிய பொருள்களைக் கண்டெடுத்த ரோபோவின் பெயர் “ஸ்கார்ப்’.2050,ம் ஆண்டுக்குள் சிவப்பு விளக்கு ஏரியாக்களில் பெண்களுக்கு பதிலாக ரோபோக்கள் இடம்பெறும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
nov 26 - robot
செக்ஸ் பொம்மைகள், கருவிகள் போன்றவைஎல்லாம் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கின்றன. அதற்கிடையில் அமெரிக்காவை சேர்ந்த ‘ட்ரூ கம்பெனி’ என்ற நிறுவனம் ‘ராக்ஸி’ என்ற செக்ஸ் ரோபோவை 2010,ல் அறிமுகப்படுத்தியது. இதுதான் உலகின் முதல் செக்ஸ் ரோபோவாக கருதப்படுகிறது. வழக்கமாக ஒருவரது விருப்பத்துக்கு ஏற்ப ஒரு செக்ஸ் பொம்மையின் உடல் நிறம், முடி நிறம், முக அமைப்பு ஆகியவற்றை மாற்றிக் கொள்ள முடியும். சதே சமயம் செக்ஸ் ரோபோவான ராக்சியை பொருத்தவரை அதன் ‘மூடு’கூட மாற்றிக் கொள்ளலாம். ரொம்ப வெட்கப்படும் ப்ரிகிட் ஃபரா, அதிரடி பெண்ணான வைல்ட் வெண்டி, வெகுளி பெண்ணான யங் யோக்கோ என்பது உள்பட 5 கேரக்டர்களாக இந்த ரோபோவை மாற்றிக் கொள்ள முடியும். இப்படியான தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வருங்காலத்தில் அதிநவீன செக்ஸ் ரோபோக்கள் வரக்கூடும். 2050ம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த விபசார விடுதிகளிலும் பெண்களுக்கு பதிலாக ரோபோக்கள் இடம்பெறும் என்கிறார்கள்.

இந்நிலையில் மனிதனை போன்று தோற்றமளிக்கும் ரோபோ எனப்படும் இயந்திர மனிதனும் நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான்.இது போன்ற ரோபோக்கள் மனிதர்களுக்கு பயன்படும் வகையிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் கொடுக்கும் கட்டளைக்கு ஏற்ப பணிகளை அவை செய்கின்றன. இது வரை ஒரு வேலைக்காரன் என்ற நிலையில் உள்ள அவற்றை தற்போது பாதுகாப்பு பணி, மருத்துவ சிகிச்சை, உடல் நலம் பேணுதல், வழிகாட்டிகள் மற்றும் பிற பணிகளில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப அமைப்பில் உயிரி மருத்துவ பொறியியல் துறையின் பேராசிரியராக இருப்பவர் சார்லி கெம்ப். இவர் மனிதன் எதையெல்லாம் செய்கிறானோ அதனை திரும்ப செய்யும் வகையில் ரோபோக்களை வடிவமைக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதனால் மனிதர்களுக்கு சேவை செய்யும் வேலைக்காரன் என்ற நிலையில் இருந்து சக மனிதன் என்ற அந்தஸ்திற்கு ‘நர்சிங்’ என்ற தகுதிக்கு ரோபோக்கள் உயர்த்தப்படும் என்றும் அதற்கான ஆய்வுகள் பல்கலை கழகத்தில் நடைபெற்று வருவதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

Now, robots being made to imitate humans
**********************************************************
In an effort to make robots function and collaborate with humans, researchers are now aiming to build robots that can mimic human actions and perform tasks as humans do.Charlie Kemp, an associate professor in biomedical engineering at the Georgia Institute of Technology in Atlanta, said that this is the wave that’s happening in robotics right now, the New York Times reported.