October 22, 2021

நபார்டு வங்கியில் கிரேடு ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கான பணி வாய்ப்பு!

இந்திய அரசு மற்றும் இந்திய ரிசரிவ் வங்கியின் நிறுவனமான தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (NABARD BANK) காலியாக உள்ள கிரேடு ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி மேலாளர் (Grade A)

காலியிடங்கள்: 37

சம்பளம்: ரூ.17,100 -1,00 (11) -28,100 -EB-1,000(4)- 32,100 -1100 (1) -33,200 மற்றும் இதர சலுகைகள்
3  - vazhikatti NABARD-BANK.j
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.08.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.

பணி
: மேலாளர் (Grade-B)

காலியிடங்கள்: 30

சம்பளம்: ரூ.21,000 -1,00 (9) -30,000 -EB-1,000(2)- 32,000 -1100 (4) -36,400 மற்றும் இதர சலுகைகள்.

கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.08.103 தேதிப்படி 35-க்குள் இருத்தல் வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: கிரேடு ஏ பணிக்கானவர்கள் இரண்டு நிலைகளில் நடைபெறும் தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

கிரேடு பி பணிக்கானவர்கள் கல்வித்தகுதி, அனுபவம் வயது போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்: ரு.400. வங்கி சேவைக் கட்டணம் ரூ.50 சேர்த்து ரூ.450 செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியனர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.babard .org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த விவரங்களை பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nabard.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், விண்ணப்பக் கட்டணம் செவுத்துவதற்கான கடைசி தேதி: 14.10.2013

கிரேடு A பணிக்கான தொடக்க நிலை தேர்வு நடைபெறும் நாள்: 24.11.2013