September 25, 2021

நடிகர் சந்தானம் + திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் ஐ. டி. ரெய்டு!

நடிகர்கள் சூர்யா-கார்த்தியின் உறவினரும், தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுக்க அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இவர் தவிர நடிகர் சந்தானத்தின் வீடு மற்றும் அலுவலகம், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி மற்றும் ஏ.எம்.ரத்னம் ஆகியோரது வீடு மற்றும் அலுவலங்களிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 - i t raid
திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி, ஏ.எம். ரத்னம், ஞானவேல் ராஜா, மற்றும் நடிகர் சந்தானம், ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில் 23 இடங்களிலும் தமிழ் நாடு முழுவதும் 6 இடங்களிலும் வருமானவரி சோதனை நடத்தியதாகவும் மேலும் ஹைதராத்தில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடத்தபப்ட்டது என வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.சினிமா தயாரிப்பில் கணக்கில் வராத பணம் பயன்படுத்தபப்டுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.