September 20, 2021

நடிகர் சங்க தேர்தலும் – நயத்து போன மெம்பர்களும்!

இன்று சன்டே என்பதால் வழக்கம் போல் தத்து பித்து – இன்று தத்து பித்துவில் நாம் வாசிக்க போவது -காவேரி தண்ணீர் விடலையா, கலை நிகழ்ச்சி வசூலா, காலை கடன் சரியா கழியலையானு எதுக்கு எடுத்தாலும் நடிகர்களை நம்பியே இருக்கும் நம் சமூகம், இது மட்டுமல்ல இதே சம்முகம்கள் நாட்டை ஆள்வதற்க்கு கூட அவர்களை நாம் எதிர்பார்த்து இருக்கும் இந்த காலக் கட்டத்தில் இப்போது அதிகம் பரப்பரப்பாய் எதிர்பார்க்கும் இன்னொரு நிகழ்வு – அக்டோபர் 18 நடிகர் சங்க தேர்தல் தான்…………….. வெளியே இரண்டு அணி மட்டும்தான்னு நினைக்கறவங்க எல்லாம் மீதியை படியுங்க………..!.
nadigar sangam oct 4
நடிகர் சங்கம் ஒரளவுக்கு பிரபலமாய் இருந்த ஒண்ணு டக்கென்று களை இழந்து கம்முனு கிட மாதிரி ஆகி போனது கடந்த 20 வருடங்கள் தான். காரனம் ட்ரேட் யூனியனில் ஒன்றான நடிகர் சங்கத்துக்கு ஓரளவு நடிகர்கள் முதல் ஓஹோ நடிகர்கள் வரை வராமல் போனது தான். இதில் ரஜினியும் அடக்கம் கமலும் அடக்கம்.அப்ப யார் தான் இந்த நடிகர் சங்கத்துக்கு வருவாங்கன்னா நாடக நடிகர்கள், நாலு சீன்ல மட்டும் வரும் நடிகர்கள், நாரத நடிகர்கள் என்று ஒரு சிறு வட்டம் மட்டுமே சுற்றி வந்த இந்த இடத்தை பத்தாண்டுகளுக்கு மேல் கோலோச்சி வந்தவர்கள் ராதாரவியும், சரத்குமாரும் தான்.

எல்லா சினிமா யூனியன்களிலும் அரசியல் வாசனை இல்லாமல் இருப்பதில்லை என்பதில் இந்த நடிகர் சங்கமும் விதிவிலக்கில்லை ஆனாலும் திமுக, அதிமுக என ரெண்டு தலைகளும் உட்டு கழட்டிய வகையில் இன்று வரை நடிகர் சங்கம் பெரிதாக பாதிக்கபட்டதில்லை இந்த திமுக / அதிமுக டாமினேஷனில்.

நிறைய தடவை போய் இருக்கிறேன் கண்டிருக்கிறேன், இரண்டு அணி தலைகளி லுடனும் பேசியிருக்கிறேன் என்ற முறையில் உண்மைகள் பல உண்டு அதில் சில உண்மைகள் மற்றும் இந்த ரெண்டனி எப்படி உண்டாச்சினு ….!.

1. நிறைய நடிக நடிகைகள் மெம்பர் கூட இல்லை மற்றும் இவர்களுக்கு ஹபிபுல்லா அவென்யு எங்கிருக்குன்னு கூட தெரியாது. இதில் ஓமன குட்டி தேசத்தில் இருந்து ஓஸ்கார் அவார்ட் எதிர்பார்த்து இருக்கும் நடிகர்கள் வரை…..

2. ஒட்டகம் கூடாரத்துக்குள் நுழைந்த கதை தான் இந்த நாசர் குடும்ப கதை – இங்கு மட்டுமல்ல – திருமதி கமீலா நாசரின் தயாரிப்பு சங்க ரென்டனி சண்டையும் இந்த நடிகர் சங்க சண்டையும் கூடவே டைரக்டரு அசோஷியனும் கூட….

3.இன்று மேடையில பள பளனு நிக்கும் பல யூத்து நடிகர்கள் எந்த ஒரு நல்லது கெட்டதுக்கும் நடிகர் சங்க பக்கம் கூட தலைகாணி வச்சு படுத்ததில்லை – ஆனா இப்ப இவர்கள் காட்டும் ஈடுபாடு – சி சி எல் எனப்படும் நடிகர் சங்க கிரிகெட்டில் ராடான் பண்ணிய குழப்படிகள் தான். எஸ் இட் காஸட்டட் ஏ லாட்.

4. அப்ப பழைய டீம் என்ன செஞ்சுது இவங்க கொலை வெறி ஆகன்னு கேட்டா – 2012 ஆம் ஆன்டும் சென்னையின் பல தியேட்டர்களை வைத்திருக்கும் ஒரு ரெட்டி குடும்பத்தின் குளோஸ் ரிலேட்டிவின் ஜாயின்ட் வென்ச்சர் பிரச்சினை தான் ஆனாலும் இந்த கட்டிட விவகாரம் இரண்டாம் பிரச்சினை தான்.

5. விஷால் எப்படி முன்னிலைபடுத்தப்பட்டார்னு கேட்டால் – பிரச்சினையை அக்குள்ல வச்சு சுத்துற ஆளை தேடிய போது கிடைத்தவர் தான் விஷால் நாசருக்கு – அதாவது டிஃபன்டன்ட் – ஆனா சரத்தின் மகள் இவரை திருமணம் செய்வார் இல்லை என்பது தனி விஷயம்.

6. ஆக பெரிய சக்தியாக விளங்க வேண்டிய நடிகர் சங்கம் ஒன் ஆஃப் தி டிரேட் யூனியனாக இருக்க இருந்த காரணம் ஒற்றுமையின்மையே தான் காரணம். இதை கண்டும் காணாமல் வந்த வரைக்கும் ஒகேன்னு அரை ஷட்டரில் கடையை நடத்தி வந்த நாட்டாமை மற்றும் ராதாரவி குழுவினர்.

7. அனேகமாய் யார் வெற்றி பெறுவாங்கன்னு உறுதியாடுச்சுன்னு நீங்க டிவியில் வரும் சில நடிக நடிகை அணி வகுப்பை பார்த்து முடிவு கொண்டால் அது தப்பு. இவர்கள் வெறும் கார்னீஷ் ரகம் தான், முக்கிய நடிகர் சங்க ஆணி வேரே நாடக நடிகைகள் தான் அவங்க இன்னும் நாட்டாமை குரூப்புக்கு தான் லாயல்.

8. அப்படியே புது அணி இன்னும் வரும் நாட்களில் சில மாற்றங்களை செய்து வெற்றி பெற்றாலும் அது எவ்வளவு நாளைக்கு என்பது தான் – ஏன் என்றால் தோத்த காட்சி இன்னொரு நடிகர் சங்கத்தை கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.

9. இதில் திமுகவின் தலையீடு அதிகம் என்றாலும், அதிமுக இதை பற்றி கண்டு கொள்ளவே இல்லை என்பதால் நாட்டாமை சைடு லாயல்ட்டி மெதுவாக உருகுகிறது.

10. கடைசி வரை முக்கிய நடிகர் சங்க தலைகள், தயாரிப்பு சங்க தலைகள், டைரக்டரு யூனியன் தலைகள் இன்னும் பல ட்ரேட் யூனியன் தலைகள் ஓப்பனாக யாருக்கு சப்போர்ட் என்பதை தெரிவிக்கவே தெரிவிக்காது……….!

Sunday Thathupithu