October 25, 2021

நடனம் வழியே ஆய்வை வெளிப்படுத்தி விருது வென்ற இந்திய பெண் விஞ்ஞானி!

அமெரிக்க பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்திற்கான பயிற்சி பெறும் இந்திய மாணவி ஒருவர் தனது ஆய்வு குறித்து நடனம் வழியே வெளிப்படுத்தியதற்காக 2014ம் ஆண்டின் ‘உங்களது முனைவர் பட்டத்திற்கான நடனம்’ போட்டியின் உயரிய விருதை வென்றுள்ளார்.
woman scintist. 2
அமெரிக்காவின் ஏதென்ஸ் நகரில் உள்ள ஜார்ஜியா பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருபவர் உமா நாகேந்திரா. இந்திய விஞ்ஞானியான இவர், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஏதென்சில் உள்ள கேனோபி ஸ்டுடியோவில் நடன பயிற்சியை தொடங்கியுள்ளார்.

இது குறித்து கூறிய அவர், தகவல்களை நாள் முழுவதும் பார்த்து கொண்டிருக்கும் எனக்கு அதன்பின் எனது மூளையின் வேறு பாகத்தை உபயோகிப்பதற்கு உதவுவதால் நான் நடனத்தை நேசிக்கிறேன் என கூறியுள்ளார். எனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வு ஆனது தெற்கு அப்பாலேச்சியன் மலை பகுதிகளில் உள்ள பல்வேறு வகையான வேறுபட்ட மர கன்றுகள் மண்ணின் உயிரினங்களுடன் எப்படி தொடர்பு கொள்கின்றன மற்றும் சூறாவளிகள் எப்படி அதனுடன் கலந்து போகின்றன என்பதை பற்றி நோக்கம் கொண்டது.

ஒரு பகுதியில் வளரும் தாவரங்களை மாற்றும் தன்மையுடைய சூறாவளி மற்றும் அவை ஒன்றுடன் ஒன்று மண்ணின் வழியே மேற்கொள்ளும் தொடர்பு ஆகியவற்றை குறித்து அறிந்து கொள்வதற்காக கிரீன்ஹவுஸ் மற்றும் கள பயிற்சிகள் ஆகியவற்றை இணைத்து ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த போட்டி உயிரியியல், வேதியியல், இயற்பியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய முக்கிய 4 பிரிவுகளில் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர் ரூ.30 ஆயிரம் பரிசு தொகையை பெறுகிறார். போட்டியில் ஒட்டு மொத்தமாக வெற்றி பெறுபவர் பரிசு தொகையுடன் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலை கழகத்திற்கு சுற்றுலா செல்லும் தகுதியையும் பெறுகிறார்.