October 24, 2021

நஞ்சால் நாசமாகி வரும் வாழ்க்கை – எச்சரிக்கை -2!

காலையில் தினமும் கண்விழித்ததிலிருந்து இரவில் தூங்கி மறுபடி எழும் வரை நாம் இயற்கையை விரட்டியடித்து நஞ்சிலேயே நம் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறோம் வாழ்கிறோம்…என்று சொன்னால் நம்புவதற்கு கஷடமாகத்தானே இருக்கு….

சந்தேகமிருந்தால் நீங்களே வந்து சற்றே பாருங்களேன்

காலையில் குளியல் முடிந்த பிறகு குழந்தைகள் முதல் முதியவர் வரை அவரவர் பணிக்கேற்ப காலை சிற்றுண்டி அல்லது காலை உணவு எடுத்துக்கொள்வர்.நகர வாழ்க்கையில் இயந்திர கதியில் ஓடிக்கொண்டு அன்றாடம் பசியை போக்க அல்லல்படும் உடன்பிறப்புகள் தெருமுனைக் கடைகளில் கிடைத்ததை தின்று உடலைக் கெடுத்துக் கொள்ளும் அவல நிலை மிக மிக மோசம்.
4 - health Foodborne illness_
நோய்வாய்ப் பட்டவர்களைத் தவிர வேறு யாராக இருந்தாலும் காலை உணவை உட்கொள்ளுவது மிகவும் அவசியம்.முன்பெல்லாம் வீட்டிலும் ,கடைகளிலும் இட்லி தோசை போன்றவற்றிற்கு அவர்கள் இடத்திலேயே மாவு தயாரித்து புளிக்கவைத்து மறுநாள் சிற்றுண்டி தயாரிப்பது வழக்கம்.மேலும் சிற்றுண்டி என்றால் எதாவது ஒரு வகை மட்டும் இருக்கும்.உண்ட பிறகு தன் வேலையை கவனித்துக்கொள்ள தேவையான சக்தி கிடைக்கும்.

ஆனால் இப்போது எல்லாமே பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்டு முன்னமே தயாரிக்கப்பட்ட தயார்நிலைபொருட்களாகவே வருகிறது.அதுவும் இந்த பாக்கெட்டுகளில் விற்கப்படும்இட்லிமற்றும் தோசை மாவு வகைகள் இரண்டு நாள் ஆனாலும் புளிக்காது.இட்லி வெள்ளை வெளேர் என்ற நிறத்தில் இருக்கும்,தோசை வீட்டு தோசையில் வருவதை விட நன்கு வரும். ஆனால் இந்த மாவு வகைகள் பெரும்பாலும் தரம் குறைந்த அரிசியில் தயாரிக்கப்பட்டு நாள்பட இருக்க ஒரு சில கலவைகளும் நிறத்திற்கு மிகவும் மலிவாக கிடைக்கும் புண்களுக்கு மேல்தடவும் மருத்துவ பவுடர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன..இந்த கலவையை சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமானக் கோளாறு,மலச்சிக்கல்.குடல் புண் ,மற்றும் மற்றும் மஞ்சள்காமாலை போன்ற தொந்தரவுகள் வருவது உறுதி.

அதைப் போன்றே தான் இடியாப்பமும். ரெடிமேட் இடியாப்பம் பற்றி ஏற்கனேவே நம் ஆந்தை ரிப்போர்ட்டரில் செய்தி கொடுத்திருக்கிறோம்

அடுத்து ஆப்பம் என்ற அதி உன்னத உணவு. அதிலும் இப்போது தேங்காய்ப்பால் இல்லாமல் அரிசிமாவுடன் வெறும் சோடாமாவு கலந்துதான் பெரும்பாலான கடைகளில் ஆப்பம் செய்து விற்கிறார்கள்.

இப்போது நாம் சிற்றுண்டி சாலைகளில் எதாவது ஒரு வகை மட்டும் சாப்பிடுவதே இல்லை.இட்லி –வடை,இட்லி-பொங்கல் ,பொங்கல்-வடை,ஊத்தப்பம்,சப்பாத்தி,இடியாப்பம் வடைகறி என பல்வேறு காம்பினேஷன்களில் சாப்பிட பழகிவிட்டோம்.
எதாவது ஒரு வகை என்றால் எளிதில் செரிமானம் ஆகும் .சக்தியும் கிடைக்கும்.கலப்பு வகை என்றால் நம் வயறு அவற்றை சீரணிக்க கஷ்டப்படும் மேலும் நமக்கு அயர்ச்சியையும் தரும்.சாப்பிடுவதன் நோக்கமே கெட்டுவிடும்.

பொங்கல் எனில் வாசனைக்கு டால்டா சேர்க்காத பொங்கலே கிடையாது .இந்த டால்டா கலந்த பொங்கல் உள்ளே போனதும் வயறு கனமாகிவிடும்,தூக்கம் வரும்.நன்றாக பாருங்கள் கடைகளில் பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் வருகிறதா இல்லையா என்று.அதற்கு பதில் வீட்டிலேயே குறைந்த எண்ணெயும் ,சிறிது தேவையானால் நெய்யும் ,இஞ்சி மிளகு கலந்த பொங்கல் செய்து சாப்பிட்டால் தொந்தரவு வராது.

இதற்கிடையில் வீட்டில் செய்த வடை நிறைய பேருக்கு பிடிக்காது. ஏனெனில் அது மொறு மொறு என்று இருக்காது. கடைகளில் செய்யப்படும் வடைகளில் சோடா மாவு கலக்கப்படுவது எல்லாருக்கும் தெரியும் ஆனாலும் இந்த மொறுமொறுப்புக்கு ஆசைப்பட்டு பல நாள் பலவித பண்டங்களை செய்த ஒரே எண்ணையில் பொரித்த வடையைதான் மனம் விரும்புகிறது,இதை தொடர்ந்து சாப்பிட்டால் குடல் பகுதியிலுள்ள நீர்ப்புத் தன்மை உள்ள சவ்வு போன்ற பகுதியில் துளை ஏற்பட்டு கொஞ்ச நாட்களில் குடல் புண் அவதரிக்கும்.

அடுத்து சப்பாத்தி அல்லது பூரி .இப்போது அதுவும் தயார்நிலை கவர்களில் கிடைக்கிறது.சற்றேயோசித்துப் பாருங்களேன் ……………வீட்டில்சப்பாத்தி மாவு பிசைந்துமறு நாள் வரை வைத்திருந்தால் நன்றாக இருக்குமா? அப்ப கெடாமல் இருக்க எதோ கலக்கத் தானே வேண்டும் .கவர்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பொருட்களால் நமக்கு வேலை மிச்சமாகலாம் ஆனால் கண்டிப்பாக உடல் ஆரோக்கியம் நம் கையில் இருக்காது.

இதில் முக்கியம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் இப்போது நமக்கு கிடைக்கும் அரிசியும் சரி கோதுமையும் சரி 50-60 ஆண்டுகளுக்கு முன் விளைவிக்கப்பட்ட தானிய வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

இப்போது இவற்றின் விதைகள் அனைத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்டு ,பெருவாரியான விளைச்சலுக்கும் ,மாறுபட்ட ருசிக்கும் என தயாரிக்கப்பட்டவை.விளைச்சலே இப்படி இதிலும் மேலும் நல்ல நிறம் வேண்டும் என்று நன்கு பாலிஷ் செய்கிறோம் என்று முனை ஒடித்து சத்தை நீக்கி சக்கை மட்டுமே நமக்கு வருகிறது. சக்கை என்றதும் நார் சத்து என்று தவறாக எண்ணிவிடக்கூடாது.இது கழிவு சக்கை மேலும் கூடவே நீரழிவை தூண்டக்கூடிய சர்க்கரையும்.

இவை யாவும் இல்லை என்றால் மைதா மாவில் செய்யப்பட்ட சமோசா அல்லது பரோட்டா போன்ற வகை உண்ணக்கூடாத வகைகள்.
இதிலும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டியது மைதா என்பது கோதுமையில் இருந்து எடுக்கப்படும் கடைசிகட்ட பொருள்.இதன் உண்மை நிறம் சற்றே பழுப்பு .அதை வெள்ளை நிறமாக மாற்ற உடலுக்கு கேடு செய்யும் வேதிப்பொருள்தான் கலக்கப்படுகிறது.மேலும் மைதாவில் எந்த சத்தும் கிடையாது.வயிறை நிரப்பி வியாதியை மட்டுமே வளர்த்துக்கொள்ளலாம்.இந்த மைதாவினால் செய்த பரோட்டா போன்ற உணவை சாப்பிடுவது கூடாது என்பதை வலியுறித்தி தென் தமிழக மாவட்டங்களில் சிலர் விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.

** பொதுவாகவே நாம் இப்போது சரிசதவிகித உணவிலிருந்து விலகி இந்த மாவுசத்து (கார்போஹைட்ரேட்) அதிகம் உள்ள உணவையே அதிகம் எடுத்து வருகிறோம்,புரத சத்துமிக்க உணவுகளை நாம் குறைத்து வருகிறோம் .புரதம் ஒரு மனிதனின் கட்டமைப்பை நிறுவக்கூடிய ஒரு உணவு .அதை முறைப்படி எடுக்காவிட்டாலும் தீமைதான்.

வாத்தியார்