October 19, 2021

நஞ்சால் நாசமாகி வரும் வாழ்க்கை – எச்சரிக்கை -3!

பொதுவாக காலை உணவு/சிற்றுண்டி ஏற்கனவே நாம் சொன்ன உணவு வகைகளில் அடங்கி விடுகிறது.இன்னும் சிலர் நான் இந்த ஹெவியான உணவு வகைகளை உண்பதில்லை.ஓட்ஸ் அல்லது கோதுமை அல்லது ரவை கஞ்சி அல்லது கார்ன்ஃப்லேக்சில் பால் ஊற்றி சாப்பிடுகிறேன் என்று கூறுவோரும் உண்டு.சாதரணமாக காலையில் சாப்பிடும் உணவு அன்றைய நாளை நல்ல முறையில் களைப்பு இல்லாமல் செய்யக்கூடிய சக்தி கொடுக்கும் ஆதாரமாகும்.அந்த நேரத்தில் இது போன்ற ஏதேனும் ஒரு வகை சத்து மட்டும் கொண்ட அல்லது எந்த சத்தும் அற்ற இத்தகைய குறை உணவை தவிர்த்து நல்ல உணவாக சாப்பிடுவது நன்மை பயக்கும்.
6 - health poison-apple.
மேலும் கலோரி பார்த்து சாப்பிடுகிறேன் என்று கூறி இப்படிப்பட்ட தூர எறியும் சக்கைகளை மட்டும் சாப்பிடுவது நல்லதல்ல.பால் பழச்சாறு மற்றும் இந்த குறை உணவு அல்லது சாப்பிடாமல் இருப்பது ஆகியவை நோய் உள்ளவர்கள் அல்லது விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறையாகும்..

சிலர் உடல் எடை ,பருமனை குறைக்க இவற்றையெல்லாம் எடுத்துக் கொள்வார்கள்.பழச்சாறு அதாவது ஜூஸ் என்பது இப்போ ரொம்ப பேஷன் ஆகிவிட்டது. பழ வகைகளை நிறைய சாப்பிடலாம்.மனித உடலுக்கு நிறைவான சக்தியை கொடுத்து,உடல் உறுப்புகளுக்கு குறைந்த வேலையை கொடுத்து ,உடற் கழிவுகளைதிறம்பட வெளியேற்றும் திறன் பழங்களுக்கு மட்டுமே உண்டு,எனவே மனிதனின் முதல் உணவு பழங்கள்தான்..

இதற்கிடையில் பழங்களை நன்கு கழுவி ,துண்டுகளாக்கி அப்படியே சாப்பிட வேண்டும் அதற்கு பதிலாக ஜூஸாக மாற்றும்போது பழத்தில் உள்ள நார்சத்து உருமாற்றம் பெறுவதுடன் பழத்தின் சர்க்கரைத் தன்மை அதிகரிக்கிறது.நாம் அத்துடன் நிற்காமல் அந்த ஜூசை வடிகட்டும் வேலையையும் செய்கிறோம்.அதாவது மிச்சமிருக்கும் நார்சத்தையும் போக்கி விடுகிறோம்.இது நம் உடலின் சர்க்கரையை உடனடியாக அதிரடியாக உயர்த்துகிறது.எனவே ஜூஸாக அருந்துவது லூசாகித்தான் போகும்.

மனிதனின் முதல் மற்றும் முழுமையான உணவு பழங்கள்தான். அவரவர் வசிக்கும் பகுதிகளில் கிடைக்கும் பழங்களை ,அதாவது இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள்தான் சத்தான பழங்கள் என கருதி மிகப்பெரிய வணிக வளாகங்களை நோக்கி ஓடவேண்டாம் ,ஏனெனில் அங்கு விற்கப்படும் பழ வகைகள் ,காயாக அறுவடை செய்யப்பட பிறகு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டு ,விரைவில் கெட்டு விடாமல் இருக்க ஒரு சில வேதிப் பொருட்களை தெளித்து பளபளப்புக்கு மெழுகு போன்ற பலவித
பொருட்களை பூசி சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது..

சமீபத்தில் வெளியான தகவல் ஒன்று அறுவடை செய்த ஆப்பிள் வணிக வளாகத்திற்கு வரும் போது 13 மாதங்கள் ஆகிறது என்று கூறுகிறது. மேலும் வெளிநாட்டில் விளைவிக்கப் பட்ட கனிவகைகள் மட்டுமே நிறைந்த சத்து உள்ளது என்ற எண்ணமும் இப்போது உள்ளது.அதுவும் தவறுதான்.

எனவே உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பழமோ அல்லது வெளிநாட்டில் விளைவிக்கப்பட்ட பழமோ எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். முக்கியமானது என்னவெனில் நன்கு கழுவி ,அதன் மேலுள்ள வேதிப் பொருட்கள் நீக்கப்பட்ட பிறகே சாப்பிடுவது நலம்.வாரத்திற்கு மூன்று நாட்களாவது பழங்கள் சாப்பிடுவது நன்மை பயக்கும்.

இன்னும் சிலர் காய்கறிச் சாறு அருந்துகிறார்கள் .இங்கும் பார்க்கும் போது பெரும்பாலான காய்கள் உரம் தெளித்து வளர்க்கப்பட்ட தாவரங்களிலிருந்து பறிக்கப்படுகின்றன.பறித்தபின் அதன் மீது சாயம் கலந்து நிறத்தை கூடி பின்புதான் சந்தைக்கு அனுப்பி வைக்கின்றனர்.நீங்கள் பிரும்மாண்டமான கடைகளில் வாங்கினாலும் சரி அருகில் உள்ள அண்ணாச்சி கடையில் வாங்கினாலும் சரி எந்த காய் வாங்கினாலும் அவற்றை பயன்படுத்து முன் குறைந்தது அரை மணி நேரம் நல்ல தண்ணீரில் மூழ்கி வைக்கவும். இப்போது பார்த்தால் சாயம் தண்ணீரில் இறங்கி இருக்கும் .பிறகு மீண்டும் ஒரு முறை நல்ல தண்ணீரில் அலசிய பிறகுதான் பயன்படுத்த வேண்டும்.

இதில் இந்த காய் கீரைஎன்றில்லை எல்லாவற்றிற்கும் சாயத்தை கண்டுபிடித்துவிட்டார்கள் .இந்த சாயங்கள் அனைத்துமே கேன்சர் உற்பத்தி செய்யக்கூடியவை .அதைப்போன்றுநாட்டு ரகம் மற்றும் ஹைபிரிட் ராகம் என்று வருகிறது.அதற்கு ஏற்றார் போல் சாயம் தயாராக இருக்கிறது.

மேலும் இந்த சாறு யார் அருந்த வேண்டும் என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.உடலுக்கு சக்தி மற்றும் சத்து வேண்டும் என்றால் மிக்சியில் போட்டு அரைத்த காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை வடிகட்டாமல் அப்படியே சாப்பிடலாம் .இதில் உங்களுக்கு பிடித்த காம்பிநேஷனிலும் செய்துகொள்ளலாம்.இப்போது ஸ்மூத்திஸ் என்று வெளிநாடுகளில் இப்படித்தான் அருந்துகிறார்கள்.முக்கியம் வெள்ளை சர்க்கரை என்ற நஞ்சை சேர்க்கக்கூடாது.

இன்னும் சிலர் நாங்கள் இதெல்லாம் சாப்பிடுவதில்லை ப்ரெட். வெண்ணை மற்றும் ஜாம் ஆகியவற்றை மட்டும் சாப்பிடுகிறோம். என்கின்றனர்.முதலில் ப்ரெட் நமக்கு ரெகுலராக சாப்பிடக் கூடிய உணவு அல்ல.இரண்டாவது நமது சுகர் பேஷண்டுகள் இது கோதுமையில் செய்தது எனவே நான் தைரியமாக சாப்பிடுகிறேன் என்று சாப்பிடுகின்றனர்.நன்கு தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் கோதுமை சாப்பிட்டாலும் சுகர் அதிகரிக்கத்தான் செய்யும்.

அடுத்து ஜாம் அதாவது பழக்கூழ் .இதிலும் பார்த்தால் பழங்களை அரைத்து அத்துடன் வெள்ளை சர்க்கரையை அள்ளிக்கொட்டி கொதிக்கவைத்து கிளறி புளிப்புக்கு சிட்ரிக் ஆசிட் கலந்து இன்னும் பல நாள் கெடாமல் இருக்க அதன்மீது வினிகர் போன்ற பொருட்களை கலந்து புட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.இதுவும் சுகரை அதிகப்படுத்தும் ஒரு பொருள்தான்.

அடுத்து வெண்ணை மற்றும் சீஸ் மற்றும் பனீர் போன்ற பொருட்கள் .வீட்டில் கடைந்தெடுத்த வெண்ணை ,காட்டேஜ் சீஸ் மற்றும் வீட்டில் தயார் செய்யும் பனீர் போன்றவை உடலுக்கு நல்லதுதான்.இதுவே ப்ராஸஸ்ட் என்ற வகையில் வருகிறது. அவை எதுவுமே உடலுக்கு நன்மை செய்யக்கூடியதல்ல.எனவே ப்ரெட் பட்டர் ஜாம் உணவும் இயற்கை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!!

வாத்தியார்
.