October 19, 2021

தொழுகை செய்யாத சிறுவனின் கையை காணிக்கையாக கேட்ட மதகுரு!

எங்கும் — கிடைக்கும் சுத்தமான இடங்களில் எல்லாம், எந்த நிலையிலும் — போர்சூழலோ, புரட்சி சமயமோ, முக்கிய விளையாட்டு இருக்கும்போதோ, மீன்பிடிக்க தூண்டில் போட்டிருக்கும்போதோ, பனிக்கட்டி மீதோ, குளிரிலோ, வெயிலிலோ, மழையியோ.. பாறையோ, பள்ளமோ, மேடோ, காடோ, ரோடோ, ரோட்டோர பிளாட்ஃபாரமோ, மைதானமா, ரயிலோ, பேருந்தோ, விமானமோ, கப்பலோ, கடலோ, பாலைவனமோ… என்றெல்லாம் பாராமல்…எப்படியும் — உண்மையான இறையச்சம் கொண்ட முஸ்லிம்கள், தொழுகையை எக்காரணம் கொண்டும் விடுவதில்லை.
Muslim-Teen-Boy-
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் லாகூர் அருகே உள்ள குஜ்ர ஷா முகீம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மசூதியில் மதகுருவாக இருப்பவர் ஷபீர் அகமது.நேற்று முன்தினம் மசூதியில் வழக்கமான தொழுகை நடந்தது. அப்போது யார் தொழுகையில் ஈடுபடவில்லை என மதகுரு கேட்டார். அப்போது அங்கிருந்த முகமது அன்வர் என்கிற 15 வயது சிறுவன் கையை உயர்த்தி ஒப்புக் கொண்டான். எனவே அவன் தெய்வ நிந்தனை செய்ததாக அறிவிக்கப்பட்டது.

அதற்கு தண்டனையாக சிறுவன் தனது கையை வெட்டி துண்டித்து தன்னிடம் காணிக்கையாக செலுத்த வேண்டும் என மதகுரு உத்தரவிட்டார். அவரது கட்டளையை ஏற்றுக் கொண்ட அச்சிறுவன் வீட்டிற்கு சென்றான். பின்னர் அரிவாளால் தனது ஒரு கையை துண்டாக வெட்டி அதை ஒரு தட்டில் வைத்து மதகுரு ஷபீர் அகமதுவிடம் எடுத்துச் சென்று வழங்கினான். அந்த சிறுவன் இச்செயலை பெற்றோரும், அண்டை வீட்டினரும் தடுக்க வில்லை. மாறாக ஆடிப்பாடி கொண்டாடினர்.

இதற்கிடையே இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீயாக பரவியது. உடனே அங்கு வந்த போலீசார் சிறுவன் கையை துண்டிக்க தூண்டிய மதகுரு ஷபீர் அகமதுவை கைது செய்தனர். தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மதகுரு மீது சிறுவனின் குடும்பத்தினர் புகார் கொடுக்கவில்லை. கைது நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .