September 27, 2021

தொழிற்சாலைகளில் இரவு ஷிப்டுகளில் பெண்கள் குஜராத் ஹைகோர்ட் அனுமதி

தொழிற்சாலைகளில் இரவு ஷிப்டுகளில் பெண்கள் பணி செய்ய குஜராத் ஹைகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான தொழிற்சாலை சட்ட பிரிவு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என கருத்து தெரிவித்து உள்ளது.குஜராத் மாநிலத்தில் இரவு நேரத்தில் தொழிற் சாலைகளில் பெண்கள் பணி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலை சட்ட விதிகளின்படி, இந்த நடைமுறையை பெரும்பாலான தொழிற்சாலைகள் கடைபிடித்து வருகின்றன.
lady work in gujarat owl 15
இந்த சட்டவிதியை எதிர்த்து அம்ரேலி மாவட்டத்தை சேர்ந்த மகிளா அறக்கட்டளை அகமதாபாத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. பகல் நேரத்தில் வீட்டு வேலை இருப்பதால், தொழிற்சாலைகளில் பணி செய்ய இரவு நேரமே சரியானது என பெண்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஹைகோர்ட் தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சாரியா மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, இரவு ஷிப்டுகளில் பணி செய்ய பெண்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இது தொடர்பான தொழிற்சாலை சட்டப்பிரிவு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்ட தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Women can work in factories during night shift: Gujarat HC
**************************************************************
A provision under the Factories Act that prohibits women from working in factories during night hours has been held unconstitutional by the Gujarat High Court. A division bench comprising Chief Justice Bhaskar Bhattacharya and Justice J B Pardiwala said Friday that the provision imposed “unreasonable restriction” on women’s fundamental right to work.