October 21, 2021

தொல்லைக்காட்சி -ன்னு ஒரு படம் ரெடியாகுது! தெரியுமில்லே ?!

“தொல்லைக்காட்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பரபரப்பாக நடந்து வருகிறது. அஸ்வின் கதாநாயகனாக நடிக்க, ஜனனி கதாநாயகியாக நடிக்க, மனோ பாலா, மயில்சாமி, சுப்பு அருணாச்சலம், ஆதவன் மற்றும் பல முன்னனி நட்சத்திரங்கள் நடிப்பில் இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வருகிறது. நா.முத்துகுமார் வரிகளில் தரண் இசையமைக்கிறார்.


அமீர்கான் நடித்த இந்தித் திரைப்படமான ‘கஜினி’, சூர்யா நடித்த ‘அஞ்சான்’ போன்ற படங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த M.சாதிக்கான் இதன் மூலமாக இயக்குநராகிறார்.

படம் பற்றி கேட்ட போது , டி.வி. நிகழ்ச்சி பார்ப்பதால் ஏற்படும் காதல், குடும்பச்சண்டை, குழப்பம் மற்றும் சமூக பார்வை கொண்ட நகைச்சுவை கலந்த ஒரு கிராமத்துக் கதையாக உருவாகி வருகிறது.” என்றார் இயக்குநர்