October 18, 2021

‘தொப்’பென்று முடிந்து போன ‘நய்யாண்டி’ நாயகியின் தொப்புள் விவகாரம்!

இன்று காலையில் நஸ்ரியாவின் தந்தை நசீம் , நஸ்ரியாவின் வழக்கறிஞர், தயாரிப்பாளர், சைபர் க்ரைம் அதிகாரிகள் ‘நய்யாண்டி’ படத்தை ஃபோர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் பார்த்துள்ளனர். அபபோது சர்ச்சைக்குரியதாக சொல்லப்பட்ட அந்தக் காட்சி ஆபாசமாக இல்லை என்பது தெளிவாகியுள்ளது. இதையடுத்து இருதரப்பினரும் சமரச பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனராம்.மேலும் உறுத்தலான அந்தக் காட்சியும் படத்தில் இருந்தே நீக்கப்பட இருபபதால் நஸ்ரியா, இயக்குனர் சற்குணத்திடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
9 nazriya-nazim.2
நய்யாண்டி’ படத்தில் நஸ்ரியாவுக்கு டூப் வைத்து தொப்புளைக் காட்டிய விவகாரம் மெதுவாக் சுருதி குறைய ஆரம்பித்திருக்கிறது.நேற்று டைரக்டர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் நஸ்ரியா.

அதற்குப் பிறகு, சற்குணம்’ வேண்டுமானால், மீடியா நண்பர்களுக்கு பாடலைத் திரையிட்டுக் காட்டுகிறேன். நஸ்ரியாவும் பாடலைப் பார்த்து பதில் சொல்லட்டும். உறுத்தலாக இருந்தால் அந்தக் காட்சியை நீக்கவும் தயார் ‘என்றார்.

இந்நிலையில் இன்று காலையில் நஸ்ரியா அப்பா நசீம் , நஸ்ரியாவின் வழக்கறிஞர், தயாரிப்பாளர், சைபர் க்ரைம் அதிகாரிகள் ‘நய்யாண்டி’ படத்தை ஃபோர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் பார்த்தார்களாம்.பெரும்
சர்ச்சைக்குரியதாக சொல்லப்பட்ட அந்தக் காட்சி ஆபாசமாக, கவர்ச்சியாக இல்லை என்பது தெளிவானதாம். அதற்குப் பிறகு சமரச பேச்சுவார்த்ததைகள் நடந்திருக்கின்றன.அப்போது முதலிரவில் தனுஷ் – நஸ்ரியாவின் கால்கள் பின்னி பிணைந்திருப்பது…பிறகு எழுந்து அமர்ந்த நஸ்ரியாவின் முதுகில் வியர்வை…தனுஷ் மடியில் நஸ்ரியா படுத்து உறங்குவது…ஆகிய மூன்று இடங்கள் மட்டும் நீக்கினால் போதும் என்று சொன்னதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.

இதையடுத்து நஸ்ரியா சற்குணத்திடம் எமோஷனலாகி, மானசீகமாக மன்னிப்பு கேட்டாராம்.’வேண்டுமானால், இருவரும் இணைந்தே பத்திரிகையாளார்களை சந்தித்து விளக்கம் கூறலாம்’ என்று நஸ்ரியா சொன்னதும், சற்குணம் சமாதானம் ஆகிவிட்டாராம்.