September 17, 2021

தொகுதி மேம்பாட்டு நிதியை தொட்டுக் கூடப் பார்க்காத எம்.பிக்கள்!

நாட்டில் உள்ள 542 தொகுதிகளில் ஆண்டு தோறும் தொகுதி மேம்பாட்டிற்காக சுமார் 5 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.இந்நிதி திட்டம் கடந்த 1993-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பி்ன்னர் 1994-95-ல் ஒரு கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்டது. 1998-ல் அவை இரண்டு கோடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து ஒரு எம்.பி. கான நிதியின் அளவு 5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தது
mp fund may 27
இந்த நிதி மூலம் எம்.பி ஒருவர் தனது தொகுதியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியும். இருப்பினும் கடந்த 15-ம் தேதி வரையில் பல எம்.பி.க்கள் எவ்வித பணியையும் மேற்கொள்ளாமல் இருப்பதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது. இதில் ஆளும் கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சட்டத்துறை அமைச்சர் சதானந்தாகவுடா, ரசாயணத்துறை அமைச்சர் அனந்த குமார் சிறு மற்றும் குறுந்தொழில் துறை அமைச்சர் கல்ராஜ்மிஸ்ரா, நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோரும் தங்களது தொகுதி நிதியை பயன்படுத்தாமல் உள்ளனர் என்று புள்ளியியல் துறை தகவல் தெரிவித்துள்ளது..

அதே போல் எதிர்கட்சியை சேர்ந்த சோனியா, சமஜ்வாடி கட்சியை சேர்ந்த முலாயம்சிங் யாதவ் ஆகியோரும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தாமல் உள்ளனர். பிரதமர் மோடி தன்னுடைய வாரணாசி தொகுதியல் சுமார் 16 சதவீதம் அளவிற்கு தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொகுதி மேம்பாட்டு நிதியை முழுவதுமாக பயன்படுத்தாத மாநிலத்தை பொறுத்த வரையில் உ.பி. முதலிடத்தையும், மகராஷ்டிரா, பீகார் போன்றவை அடுத்தடுத்த இடத்தையும் பிடித்து வருகின்றன. தமிழ்நாடு , கேரளா , மேற்கு வங்க மாநிலங்களை பொறுத்தவரையில் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியைபெரும்பாலான அளவிற்கு பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.

தற்போது எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்குக் கிடைக்கும் நிதியை வைத்து, அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு, `மாதிரி கிராம திட்டம்’ கீழ், தேவைப்படும் பணிகளை மேற்கொள்ளலாம்.`மாதிரி கிராம திட்ட’த்தின் கீழ், அனைத்து எம்.பி.க்களும் 2016ம் ஆண்டில் மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்கியிருக்க வேண்டும். அப்படியான மேலும் இரண்டு கிராமங்களை 2019ம் ஆண்டுக்குள் உருவாக்க வேண்டும். இதற்கான நெறிமுறைகளை ஊரக மேம்பாட்டுத் துறை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி வரை எம்.பி.மேம்பாட்டுத் தொகுதி திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.2,950.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டில் இதன் கீழ் ஒதுக்கப்பட்ட மொத்த தொகையே ரூ.3,937 கோடிதான் என்பதை நினைவுகூர வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.