September 17, 2021

தேசிய சீனியர் பேட்மிண்டன்: பி.வி. சிந்து சாம்பியன்!

தேசிய சீனியர் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து சாம்பியன்ஷிப் வென்றார். இவர், சக போட்டியாளரான ரித்துபர்னாசை, 21-11, 21-17 என்ற புள்ளிகளில் தோற்கடித்து இந்த பட்டத்தை வென்றார்.
p v sindhu 23
78 ஆவது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் புது தில்லியில் கடந்த 16 ஆம் தேதி முதல் இன்று வரை(23) நடைபெற்றது.. மகளிர் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து, அருந்ததியை எதிர்கொண்டார்.

அதில் 21-17, 21-14 என்ற நேர் செட்களில் சிந்து வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றோரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான கோகலேவை தோற்கடித்து, ரித்துபர்னா தாஸ் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.

இதனையடுத்து இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ரித்துபர்னாதாஸை 21-11,21-17 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதற்கிடையில் மொத்தம் ரூ.3¾ கோடி பரிசுத்தொகைக்கான கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் அடுத்த ஆண்டு (2014) ஜனவரி 7-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து இந்திய இளம் நட்சத்திரம் பி.வி.சிந்து விலகியுள்ளார்.உடல்தகுதி மற்றும் காயப்பிரச்சினை காரணமாக சாய்னா நேவால், காஷ்யப் ஆகியோரும் கொரிய ஓபனில் இருந்து பின்வாங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.