September 17, 2021

தெலங்கானா அக்னி வெயிலுக்கு பலியானோர் எண்ணி்க்கை 368-ஆனது!

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அக்னி வெயில் கொளுத்தி வருகிறது. நாள்தோறும் அங்கு அனல் காற்று அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று ஒரு நாளில் மட்டும் ஆந்திர மாநிலத்தில் 87 பேர் கடுமையான வெப்பத்திற்கு உயிரிழந்திருக்கிறார்கள். இதை அடுத்து, நேற்று அங்கு 95-ஆக இருந்த பலி எண்ணிக்கை 182-ஆக உயர்ந்துள்ளது. அக்னி வெயிலுக்கு அங்குள்ள பிரகாசம் மாவட்டத்தில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
heat bulb
அதேபோல், தெலங்கானாவில் நேற்று ஒரு நாளில் 58 பேர் வெப்பத்திற்கு பலியாகியுள்ளனர். அங்குள்ள 10 மாவட்டங்களிலும் இதுவரை 186 பேர் வெயிலுக்கு பலியாகியுள்ளதாக பேரழிவு மேலாண்மைத்துறை தெரிவித்தது.

அதிகபட்சமாக, நலகொண்டா மாவட்டத்தில் 55 பேரும், கம்மம் மாவட்டத்தில் 43 பேரும், மகபூப் நகரில் 23 பேரும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு உயிரிழந்துள்ளனர். ஐதராபாத்தில், 2 பேர் அனல் காற்றால் பலியானார்கள். கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் தெலங்கானாவில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.