September 23, 2021

தென்மாநிலங்களில் இன்று வங்கி ஸ்டிரைக்!

ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய அளவில் 9 வங்கிகளின் ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில், கடந்த 12-ஆம் தேதி நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.ஊழியர்களின் கோரிக்கைகளை இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகள் ஏற்காத நிலையில், மாநிலங்கள் வாரியாக டிசம்பர் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டது.அதன்படி தமிழகம், புதுவை, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.
bamk dec 2
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம்,”கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஊதிய உயர்வை அமல்படுத்தாமல் உள்ளதால் நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்திய அரசு எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை தள்ளிக் கொண்டே செல்கிறது.எங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் 2-ந்தேதி(இன்று) முதல் 5-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை 4 கட்டங்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.

முதற்கட்டமாக 2-ந்தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் உள்ள 23 ஆயிரம் வங்கி கிளைகளில் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்கின்றனர்.” என்றார்