September 21, 2021

தூங்காவனம் ஆடியோ ரிலீஸ் ! கம்ப்ளீட் ஸ்பீச் + ஆல்பம் + டிரைலர்

உலக நாயகன் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் திரிஷா, ஆஷாசரத் ஆகியோர் நடிப்பில், ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தூங்காவனம். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்தியம் தியேட்டரில் நடந்தது. இதில், படத்தில் நடித்த கமல்ஹாசன், நடிகைகள் திரிஷா, ஆஷா சரத், நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகர் தனுஷ் விஷால், பொன்வண்ணன், பாடல் ஆசிரியர் வைரமுத்து உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்சியில் விஷால் பேசும் போது ”கமல் அவர்களை பற்றி பேச எனக்கு வயது இல்லை, ஒரு நடிகனாக அவரை இன்னும் வியந்து பார்த்து வருகிறேன். அதை விட நல்ல மனிதராக அவரை மேலும் மேலும் வியந்து பார்க்கிறேன், எனக்கு ஒரு பிரச்சனை என்றால் கண்டிப்பாக கமல்ஹாசன் அவர்கள் வீட்டு வாசலில் தான் முதலில் வந்து நிற்பேன்’”என மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.

ஸ்பெஷல் ஹெஸ்டாக வந்திருந்த தனுஷ் பேசும் போது, “ தூங்காவனம் தமிழ்ப் படம் இல்ல, கமல் படம். உலக ரீதியாகத்தான் இருக்கும். இங்க வந்ததும் போட்டோவுக்கு நிற்கும் போது கமல் சார் பக்கத்துல நின்றுகொண்டிருந்தேன். அப்போ ஏன் கை கட்டி நிக்கிறீங்கன்னு கேட்டாரு, அது தானா கட்டிக்கிறது என்ன பண்ணமுடியும் என்று கூறினேன். அது தான் நாங்க உங்க மேல் வைத்திருக்கும் மரியாதை. கடந்த சில வருடங்களாக சிறந்த நடிகருக்கான விருதுகளைப் பெற்று வருகிறேன். ஆனா உங்க கையால் சிறந்த நடிகருக்கான விருது வாங்கும் போது தான் நடிப்புக் கான முழுமை அன்று தான் எனக்கு நிறைவடையும். அது மட்டும் தான் என்னுடைய ஒரே ஆசை. உங்களைப் பார்த்து நிறையக் கத்துக்கிட்டு, உங்களால் நாங்கள் பெயர் பெற்று வருகிறேம் என்று நினைக்கும் போது எனக்கு ரொம்பவும் சந்தோஷம்” என்றார் தனுஷ்.

இந்த விழாவில் பேசிய கமல், “இந்த தூங்காவனம் படத்தை நாற்பது நாட்களில் எடுத்தார்கள், ஐம்பது நாட்களில் எடுத்தார்கள் என்று ஆளாளுக்கு ஒரு நம்பர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றை நினைவுப் படுத்த விரும்புகிறேன்.. இந்தப்படத்தை இரண்டுமொழிகளில் எடுத்திருக் கிறோம். பெரும்பாலான காட்சிகள் இரண்டு முறை எடுக்கப்பட்டன. கார் வருகிற காட்சிதானே ஒருமுறை எடுத்தால் போதும் என்று விட முடியாது, நம்பர் பிளேட்டை மாற்றி இன்னொரு முறை எடுக்க வேண்டும், தமிழ்நாட்டு போலீஸ் வேறு தெலுங்கானா போலீஸ் வேறு அதனால் போலீஸ் வருகிற காட்சிகளையும் இரண்டு முறை எடுக்கவேண்டும். அதனால் இரண்டு படங்கள் எடுத்த கணக்காகி விட்டது. இதை 52 நாட்களில் முடிக்கவேண்டும் என்று திட்டமிட்டோம், படத்தை முடித்துப் போட்டுப் பார்த்த பிறகு சில திருத்தங்கள் செய்ததால் மேலும் எட்டு நாட்கள் எடுக்கவேண்டி வந்தது. ஆக மொத்தம் அறுபது நாட்களில் இந்தப் படங்கள் முடிந்துவிட்டன. அதாவது இரண்டு படங்கள் அறுபது நாட்களில் என்றால் ஒரு படத்தை முப்பது நாட்களில் முடித்திருக்கிறோம்.


இது சாத்தியமேயில்லை என்று பலர் சொன்னார்கள். நானே 200 நாட்கள் படமெடுத் திருக்கிறேன். சரியாகத் திட்டமிட்டால் அவ்வளவு நாட்கள் தேவை யில்லை என்று நான் சொன்ன போது, இந்தக்காலத்தில் அப்படி முடியாது என்று சொன்னார்கள். ஆனால் நாங்கள் சாதித்துக் காட்டியிருக் கிறோம். அதற்கு எங்க ளுக்குச் சரியான டீம் அமைந்ததுதான் காரணம். இதற்காக கடந்த 5, 6 வருடங் களாக ஒரு நல்ல அணியை அமைத்திருக்கிறோம். அந்த அணியின் வெற்றி தான் இந்தப் படம். நான் சொல்லி விட்டேன் என்பதால் பண்ணிய படம் அல்ல. இதற்கு முன்பு ‘ராஜபார்வை’ என்ற படம் 55 நாட்களில் 2 படங்கள் பண்ணினோம். அத்தனை நபர்களும் சேர்ந்து உழைத்தால் கண்டிப்பாக சாத்தியம் தான்.

ஒரு சி.டி மாதிரியான வட்டை கையில் கொடுத்து இதுதான் பாட்டு என்று நிரூபிக்க வேண்டிய காலம் இல்லாமல், இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஐ-டியூன்ஸில் பாடல் வெளி யாகி விட்டது. அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக் கிறது. இந்தப்படத்தில் முன்னணி நடிகர் கள் பலர் நடித்திருந்த போதும் எல்லோரும் ரிகர்சலில் கலந்து கொண்டார்கள் என்பதை பெருமை யுடன் சொல்லிக் கொள் கிறேன். அதுவும் அவர்கள் தாமாகவே முன் வந்து அப்படிச் செய்ததும் படத்தைச் சீக்கிரமாக முடிக்க ஒரு காரணம். எனவே இவர்கள் நடிக்கும் எல்லாப் படங்களிலும் இப்படியே செய்யக் கடவது என்று சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.