September 25, 2021

துவைத்த / கலைந்த துணிகளை மடித்து வைக்க உதவும் ரோபோ!

க்ளோபீமா என்னும் ஒரு புதுவகை ரோபோ மெஷனை கண்டுப்பிடித்திருக்கின்றனர். இது என்ன வகை ரோபோ என்றால் இது எவ்வளவு துணி மணிகளை பிரித்து போட்டிருந்தால் கூட மடித்து வைத்துவிடுமாம். ஏற்கனவே துவைக்க நேரம் இல்லைன்னு வாஷிங் மெஷின் வந்தாச்சு அப்புறம் அதை உலர வைக்க நேரம் இல்லைனு டிரையர் வந்தாச்சு இப்போ அந்த உலர்ந்த துணியையும் கரெக்டா மடிச்சு வைக்கத்தான் இந்த மெஷின்.
ravi 18
இது வீட்டுக்கு எவ்வளவு உபயோகமோ இல்லையோ இதை கடைகளில் தான் அதிகம் உபயோகிக்க போகின்றனர். அதாவது ஒரு புடவை வாங்க கடையைவே தலை கீழா புரட்டி போடும் பெண்மணிகளுக்கும் – அந்த உலஞ்ச கலைஞ்ச துணியை எப்படி ஒரிஜினல் வடிவத்தில் மடிக்கணுமோ அப்படியே மடிச்சு வைக்கும்.

அதுவும் ஒரு நிமிடத்தில் 100 துணிகளை கூட ஒரிஜினலான வடிவத்தில் மடிச்சு வைக்கும் கலையை கொண்டது இந்த ரோபோ. இதனுள் ஒவ்வொரு துணியின் ஒரிஜினலாக‌ மடிச்சு வைக்கும் முறையை சேவ் செய்தால் போதும். அதுமட்டுமல்ல புதுவகையாக அதுவே ஒவ்வொரு துணியை மடித்து காட்டி வியக்க வைக்க வேறு செய்யுமாம்.

என்ன கொடுமைனு நீங்க புலம்புவது கேட்கின்றது………….என்ன செய்ய நேரமின்மை எல்லோருக்கும் இப்போது பொது அஜென்டாவாகி போனதே உண்மை.

வீடியோ :

 

Smart Robot to fold clothes – CloPeMa