துப்பறியும் பணியில் சேர ஆர்வமா?
இந்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதுதான் இன்டலிஜென்ஸ் பீரோ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு. நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய விபரங்களில் இந்த அமைப்பின் பணிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பெருமைக்குரிய இந்த அமைப்பில் செக்யூரிடி அசிஸ்டென்ட் (எக்சிக்யூடிவ்) பிரிவில் காலியாக இருக்கும் 1,054 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பகுதியிலான பிராந்திய மொழியறிவு தேவைப்படும்.
இதர தேவை: புலனாய்வு தொடர்புடைய பிரிவில் முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 50
கடைசி நாள் : 2018 நவ., 10.
விபரங்களுக்கு: ஆந்தை வழிகாட்டி