September 26, 2021

துக்ளக் சோ- வை அப்பல்லோ ஆஸ்பத்திரி போய் நலம் விசாரித்தார் ஜெயலலிதா

பத்திரிகையாளர் சோ மூச்சுத் திணறல், சளி காரண மாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.உடல்நிலை தேறியதும் அவர் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் இருந்தபடி சிகிச்சையை தொடர்ந்தார்.சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடி சோ வீட் டுக்கு சென்று அவரிடம் உடல்நலம் விசாரித்தார்.
cho aug 27
இந்த நிலையில் சோவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்ட்டது. இதையடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று மதியம் 12 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்றார். அங்கு சிகிச்சை பெறும் சோவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி டாக்டரிடம் கேட்டறிந்தார்.