September 27, 2021

‘தீர்ப்பை விமர்சிக்கலாம்: ஆனால், கேள்வி எழுப்ப முடியாது’ -சுப்ரீம் கோர்ட் சுரீர்

எங்கள் தீர்ப்பு விமர்சிக்கப்படுவதை வரவேற்கிறோம். ஆனால், தீர்ப்பின் நோக்கத்தை பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது’ என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுபட கூறியுள்ளது
24 - supreme-court-
ராணுவ தலைமை தளபதியாக வி.கே.சிங் இருந்தபோது, அவருடைய பிறந்த தேதி தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வி.கே.சிங் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது வழக்கில் உச்ச நீதிமன்றம் தவறான தீர்ப்பு அளித்ததாக சிங் விமர்சித்தார்.இதை பார்த்த உச்ச நீதிமன்றம், வி.கே.சிங் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘எங்களுடைய தீர்ப்பு விமர்சிக்கப்படுவதை வரவேற்கிறோம். ஆனால், தீர்ப்பின் நோக்கம் பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்துக்கு எதிராக யாராவது இப்படி கருத்து கூறினால், மோசமான நாளை நோக்கி போய் கொண்டிருக்கிறோம் என்றுதான் அதற்கு அர்த்தம்’’ என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீசுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி வி.கே. சிங்குக்கு உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Can’t question motives of our judgement, Supreme Court tells General VK Singh
***************************************************************
The former army chief, General VK Singh, was admonished again by the Supreme Court today, which said he was out of line in questioning its motives when it ruled against him in his attempt to have the government accept that he is a year younger than army records show.