September 21, 2021

தீபாவளி திருநாள் -நம் வாசகர்களுக்கு வாழ்த்துகள்!

இருளை அகற்றி ஒளி தரும் உன்னத பண்டிகை ‘தீபாவளி’ திருநாள். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள், சமணர்களும் தீபாவளியைக் கொண்டாடுவது இதன் கூடுதல் சிறப்பம்சம். அமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த ஆண்டு முதன்முறையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடியிருப்பது, நமது கலாச்சார பெருமையை பறை சாற்றுவதாக உள்ளது.இந்நிலையில் நம் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மனப்பூர்வமாக தெரிவித்து கொள்கிறோம். மகிழ்ச்சிகரமான இந்த நன்நாளில் தமிழக மக்களுக்கும், உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கும் இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இநன்னாளை முன்னிட்டு கவர்னர், முதல்வர் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
nov 2 - happy_deepavali_
கவர்னர் ரோசய்யா: மகிழ்ச்சியான தீபாவளி தருணத்தில் தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வாழ்பவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த திருநாளில் அனைவரிடமும் அமைதி, முன்னேற்றம், சுபிட்சம், அன்பு, இரக்கம் ஒளிரட்டும்.

முதல்வர் ஜெயலலிதா: தீபாவளி திருநாளை மகிழ் ச்சியுடன் கொண்டா டும் அனைவ ருக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துகள். தீப திருநாளில், மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும். அனைவரும் உயர்வும், வளமும் பெற்று ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துகிறேன். ஜி.கே.வாசன் (மத்திய அமைச்சர்): இருள் மறைந்து ஒளி பரவும் நாள். தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் நாள். தீபாவளி மதம் சார்ந்த பண்டிகை அல்ல. மக்களின் மனம் சார்ந்த பண்டிகை. இந்த இனிய நாளில் ஒன்றுபடுவோம். பேதங்களை மறப்போம். வெற்றி பெறுவோம்.

விஜயகாந்த் (தேமுதிக): விலைவாசி காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் அன்றாடம் குடும்பம் நடத்த சிரமப்படுகின்றனர். கடனை வாங்கி விழாக்களை கொண்டாட வேண்டியுள்ளது. அதற்காக தீபாவளியை கொண்டாடாமல் இருக்க முடியாது. எனவே, ஏழை, எளிய மக்கள் தங்களது சக்திக்கேற்ற வகையில் மகிழ்ச்சியோடு கொண்டாட வாழ்த்துகிறேன்.

ஞானதேசிகன்
(காங்கிரஸ்): தீப திருநாளில் எங்கும் வளம் பெருகட்டும். அனைவரிடமும் மகிழ்ச்சி, கருணை, கல்வி, ஆற்றல் மிளிரட்டும். வன்முறை ஒழிந்து அமைதி சமாதானம் நிலவட்டும். ஒற்றுமை, ஒருமைப்பாட்டு உணர்வுடன் தீபாவளியை கொண்டாடுவோம்.

பொன்.ராதாகிருஷ்ணன்
(பாஜ): ஜாதி, மதம், மொழி, இனப் பாகுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்கி, லஞ்ச, ஊழலற்ற நல்லவர்கள் தலைமை ஏற்க இந்த தீபாவளி திருநாளில் உறுதி பூணுவோம். தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். சரத்குமார் (சமக): இந்திய கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்த நன்னாள் தீபாவளி. இந்த நாளில் வாழ்வில் இருள் விலகி அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி ஆனந்தமாய் வாழ நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இதே போல் மாநிலத்தின் பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துல்லானர்.