October 19, 2021

தீபாவளி: கூடுதல் சிறப்பு ரயில்கள்- தென்னக ரயில்வே அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.
Special Train
திருநெல்வேலி- சென்னை எழும்பூர் இடையே அக்டோபர் 12,16,19.30 மற்றும் நவம்பர் 2ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு அக்டோபர் 18ம் தேதி இரவு 9.05க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து கோவைக்கு 27ம் தேதி காலை 10.15க்கு சிறப்பு ரயில் இயக்கப்பபடவுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை மறுதினம்( வியாழக்கிழமை) துவங்குகிறது.

மேலும். கோவையில் இருந்து சென்னைக்கு அக்டோபர் 26ம் தேதி இரவு 10 மணிக்கு பிரிமியம் ரயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 11ம் தேதி துவங்குகிறது.

இந்த ரயில்களுக்கான முன்பதிவை இணையதளம் மூலம் மூலம் மட்டுமே பதிவு செய்யமுடியும் இந்த ரயிலுக்கான தேவை அதிகரிக்க அதிகரிக்க கட்டணங்கள் அதிகரிக்கப்படும் மேலும் , டிக்கெட்டை ரத்து செய்ய முடியாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.