October 25, 2021

‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் வேலை வாய்ப்பு!

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி’ லிமிடெட்டில் நிதி, இன்ஜினியரிங், சட்டம், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், டோட்டல் ஸ்பெஷலிஸ்ட், ஸ்பெஷலிஸ்ட் என 509 காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
newindia_auuurance
மொத்த இடங்கள்:

509 (பொது – 261, ஒபிசி – 138, எஸ்சி – 73, எஸ்டி – 37). இவற்றில் நிதித்துறைக்கு 65 இடங்களும், இன்ஜினியரிங் துறைக்கு 25 இடங்களும், சட்டத்துறைக்கு 40 இடங்களும், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறைக்கு 30 இடங்களும், டோட்டல் ஸ்பெஷலிஸ்ட் 160 இடங்களும், ஜெனரலிஸ்ட் 349 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது:

01.10.2014 அன்று 21 லிருந்து 30க்குள்.

தகுதி:

அ. நிதித்துறை: 

சி.ஏ அல்லது ஐசிடிபிள்யூஏ அல்லது நிதி பாடத்தில் எம்பிஏ அல்லது பி.காம்., அல்லது எம்.காம்., பட்டம்.

ஆ. இன்ஜினியரிங் துறை:

பி.டெக்.,/ சிவில்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ. பட்டம்.

இ. ஆட்டோமொபைல்:

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/ பி.டெக் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பாடத்தில் ஓராண்டு டிப்ளமோவுடன் மெக்கானிக்கல் பாடத்தில் பி.இ. பட்டம்.

ஈ. சட்டம்:

பி.எல். பட்டம்.

உ. டோட்டல் ஜெனரலிஸ்ட் மற்றும் ஜெனரலிஸ்ட்:

ஏதேனும் ஒரு பட்டம்.

சம்பளம்:

ரூ.17,240 – 840 (14) – 29,000 – 910 (4) – 32,640.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஒபிசியினருக்கு: ரூ.600.

எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு: ரூ.50.

இதை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தர்மபுரி, கும்பகோணம், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மையங்களில் ஆன்லைனில் தேர்வு நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.11.2014.

ஆன்லைனில் தேர்வு நடைபெறும் நாட்கள்: 10.1.2015 மற்றும் 11.1.2015.