October 21, 2021

திருப்பதி கோவிலில் இந்த வருசம் வைகுண்ட ஏகாதசி நஹி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு பிர மோற்சவத்துக்கு அடுத்த படியாக வைகுண்ட ஏகாதசி விழா மிக சிறப்பாக நடப்பது உண்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு காத்து கிடப்பார்கள். கடந்த 2015–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதியும், டிசம்பர் 21–ந்தேதியும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு (2016) வைகுண்ட ஏகாதசி கிடையாது. என கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 9–ந்தேதியும், டிசம்பர் 29–ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா வருகிறது.
lord jan 8
திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு முக்கிய திருவிழா நடக்கும் நாட்கள் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி ஆண்டு பிரமோற்சவம் இந்த ஆண்டு அக்டோபர் 3–ந்தேதி தொடங்கி 11–ந்தேதிவரை நடக்கிறது.

இதில் 7–ந்தேதி கருட சேவையும், 8–ந்தேதி தங்க ரத பவனியும், 10–ந்தேதி பெரிய தேர் உற்சவமும், 11–ந்தேதி சக்கரஸ்நான நிகழ்ச்சியும் நடக்கிறது.

இந்த மாதம் (ஜனவரி) 16–ந்தேதி பாரிவேட்டையும், பிப்ரவரி 7–ந்தேதி ரத சப்தமியும் நடைபெறுகிறது.

மார்ச் 19–ந்தேதி முதல் 21–ந்தேதிவரை தெப்ப உற்சவமும், ஏப்ரல் 8–ந்தேதி யுகாமி ஆஸ்தாவை, 15–ந்தேதி ஸ்ரீராமர் பட்டாபிசேகமும், நடக்கிறது.

ஏப்ரல் 19–ந்தேதி முதல் 21–ந்தேதிவரை வசந்த உற்சவமும், மே 16–ந்தேதி முதல் 18–ந்தேதிவரை பத்மாவதி தாயார் பரிநய உற்சவமும்,
ஜூலை 16–ந்தேதி ஆனிவார ஆஸ்தாவை, நவம்பர் 7–ந்தேதி புஷ்பயாகமும் நடைபெறுகிறது.