October 20, 2021

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் சிரமம் – பந்த் எதிரொலி!

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவைப் பிரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் ஆந்திராவின், 13 மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.அதனால் திருப்பதியில் 48 மணிநேரமும் சித்தூரில் 72 மணிநேரமும் முழு அடைப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் திருப்பதிக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளிலும் ஆங்காங்கே மரங்கள் சாய்க்கப்பட்டும், கற்களையும் வைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் இரவு ரயில் மூலம் புறப்பட்ட பக்தர்கள் காலை திருப்பதி ரயில் நிலையத்தில் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.
5 -telangana-trupathi road
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பதியில் 48 மணி நேர போராட்டம், சித்தூர் மாவட்டத்தில் 72 மணி நேர போராட்டம் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக திருப்பதிக்கு உள்ளே வரவோ, அங்கிருந்து வெளியே செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழக எல்லைப் பகுதியான சித்தூரில் தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்கள் தடுக்கப்பட்டதால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நிற்கின்றன.பைபாஸ் சாலையில் மரங்களை வெட்டிப்போட்டும், கற்களை குவித்தும், டயர்களை எரித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தடுக்கும் போலீசார் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கிடையில் தனித் தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த தகவல் வந்ததும் பெட்ரோல் ‘பங்க்’கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள் என அனைத்தும் நேற்று காலை முதல் மூடப்பட்டன. அத்துடன் திருப்பதி நகருக்குள் இருசக்கர வாகனத்தை தவிர வேறு எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.

இதுகுறித்து தேவஸ்தான செயல் அதிகாரி கோபால் பத்திரிகையாளர்களிடம் பேசும்போதுது:”ஆந்திராவில் நடைபெறும் 48 மணி நேர போராட்டத்தினால் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பாதிக்காதவாறு அவர்களுக்கு தேவையான வசதிகளை முடிந்த அளவு தேவஸ்தானம் சார்பில் செய்து தருகிறோம். ஆனால் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் இருந்து வயோதிகர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து சிரமப்பட வேண்டாம். அதே சமயம் இங்கே திருமலையிலுள்ள வாடகை அறைகளில் தங்கியிருப்போர் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. போராட்டம் முடியும் வரை தங்கிக் கொள்ளலாம். பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

திருப்பதியில் ஸ்ரீநிவாசம், விஷ்ணுவாசம், ரயில் நிலையம், திருப்பதி மற்றும் அலிபிரி பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு தேவையான வசதி செய்து தரப்படும்.பிரம்மோற்சவ நாட்களில் பக்தர்களின் வசதிக்காக 500 பேருந்துகளை கேட்டுள்ளோம். தற்போதுள்ள சூழ்நிலையில் தருவார்களா என்பது தெரியவில்லை.:என்று அவர் தெரிவித்தார்.

Roads to Tirupati blocked as part of anti-Telangana state protests
*******************************************************************
All roads to Tirupati are blocked by large groups protesting against the government’s decision to proceed with the division of Andhra Pradesh. Devotees heading to the famous Tirumala temple are completing their journey by foot.