October 19, 2021

தினமும் நஞ்சால் நாசமாகி வரும் வாழ்க்கை – ஓர் எச்சரிக்கை!

காலையில் தினமும் கண்விழித்ததிலிருந்து இரவில் தூங்கி மறுபடி எழும் வரை நாம் இயற்கையை விரட்டியடித்து நஞ்சிலேயே நம் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறோம் வாழ்கிறோம்…என்று சொன்னால் நம்புவதற்கு கஷடமாகத்தானே இருக்கு….

சந்தேகமிருந்தால் நீங்களே வந்து சற்றே பாருங்களேன்

காலை எழுந்தவுடன் செயற்கை நாரிழையை பயன்படுத்தி அதிகம் நிகோடின் கொண்ட பற்பசையை அதிக விலைக்கு வாங்கி பல்லை துலக்குகிறோம் இதில் இயற்கை என்ற பெயரில் கிராம்பு உப்பு எலுமிச்சை என ஆதிகாலம் முதல் நாம் பயன்படுத்தி வந்த இயற்கை பொருட்களை சிறிதளவு கலந்து செயற்கை வேதிப் பொருட்களை பெருவாரியாக பயன்படுத்தி கலர் கலரான கவர்ச்சியான குப்பிகளிலும் குழாய்களிலும் அடைத்து நம் தலையில் கட்டிவிடுகின்றனர். இதைப் பயன்படுத்தி பல் துலக்குவதால் மிக இளைய வயதினிலே துலங்க வேண்டிய பற்கள் தூளாகிவிடுகின்றன.
3 - Health in keyboard
நமது முந்தைய தலைமுறை பயன்படுத்திய ஆல,வேப்ப குச்சிகளால்
பல் சுத்தம் செய்த போது கிருமிகள் அழிய வில்லையா? 90 வயது ஆனவர்களுக்கு கூட பற்கள் திடமாக வெகு நாட்கள் நிலைத்து நிற்கவில்லையா? எங்காவது பயணம் செய்யும் போது அரிதாக பயன்படுத்த வேண்டிய இந்த பசை ,பவுடர் வேதிப் பொருட்களை அன்றாடம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததால் தான் இந்த இளமையில் பல் கொட்டுதலும் அதைத் தொடர்ந்த பல்கட்டுதலும்.

அடுத்ததாக எல்லோரும் செய்வது தூய்மையான நீர் அருந்துவது. இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் கிடைக்கும் தண்ணீர் இப்போது அசுத்த நீர் மட்டுமே.அதை முறைப்படி வடிகட்டி குடித்தாலே எவ்வித பிரச்சினையும் வாராது.ஆனால் அயல் நாட்டினர் நம்மை சுரண்டுவதற்காக அவிழ்த்து விட்ட அண்டப்புளுகில் மயங்கி சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டர் என்ற எவ்வித உயிர்சக்தியும் அற்ற தண்ணீர் என்ற திரவத்தை குடிக்கப் பழகிவிட்டோம்.அடுத்து எந்த உயிர் சத்தும் அற்ற இந்த தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் வருகிறது. 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இந்த பிளாஸ்டிக்குகள் நம் உடலுக்கு தீங்கு வரவழைக்கக் கூடிய ,கேன்சரை உண்டாக்கக் கூடிய பொருட்களால் ஆனது.

பின்பு பெரும்பாலான நம் சகோதரிகள் செய்வது டிகிரி காபி அல்லது டீ அல்லது ஊட்டச்சத்து பானம் அருந்துவதுதான்.இவை எல்லாவற்றிக்கும் பயன்படுத்துவது பதப்படுத்திய,நிலைப்படுத்திய என்றோ கறந்த பால்.மனித குலத்திற்கே பால் தேவை இல்லை என்ற ஒரு கருத்து இருந்து வந்தாலும் நமக்கு பால் இல்லாமல் அன்றாட வாழ்க்கை இல்லை என்றாகி விட்ட நிலையில் என்றோ கறந்து எதை எதையோ மிக்ஸ் செய்து பால் என்ற பெயரில் நமக்கு கிடைக்கும் இந்த தூய்மையான நல விஷத்தைதான் நாம் காய்ச்சி அருந்துகிறோம்.
சார் நான் பாக்கெட் பாலே பயன்படுத்துவதில்லை தெரு முனையில் கண்ணெதிரே கறந்த பாலைத்தான் உபயோகிக்கிறோம் என்பவர்களும் உண்டு

ஆனால் பால்கறக்கும் முன்பே அந்த மாட்டுக்கு ஹார்மோன் இன்ஜெக்ட் செய்துதான் கொண்டு வருவார்கள் .அந்த ஹார்மோன் இந்த கால குழந்தைகளிடேயே அதீத வளர்ச்சியை கொடுத்து விரைவாக நோய்களையும் கொண்டு வந்து சேர்க்கிறது.அடுத்து பாலைக் காய்ச்சி அதில் கலக்கும் டீ அல்லது காபி அல்லது ஊட்டச்சத்து பொருட்களில் எல்லாமே கலப்படம். டீ என்றால் நமக்கு கிடைப்பது கடைசி கட்ட குப்பை தூள் டீ தான் .அதில் நிறத்திற்கு சாயம் கலக்காதடீயே இல்லை எனும் அளவுக்கு பன்னாட்டு நிறுவன தயாரிப்பு முதல் இந்நாட்டு ரோஜா வரை எல்லாவற்றிலும் கலப்படம் மற்றும் கடைசி தர பொருட்கள். காபி என்றால் அளவுக்கு மீறிய சிக்கரி பவுடர் கலப்பு அல்லது சுலபமான வழி புளியங்கொட்டை.

இதில் சிக்கரி இதயத்திற்கு நல்லது செய்யும் ஒரு பொருள் என்றாலும் இந்த நமக்காகவே நன்மையை அளிப்பதாக கூறும் நிறுவனங்கள் மிதமிஞ்சிய அளவுக்கு சிக்கரியை சேர்த்து விற்கின்றன.அதனால்பித்தம் அதிகரித்து வெகுவிரைவில் கல்லீரல் தொடர்பான கோளாறுகள் நம்மை வந்துஅண்டும்.

ஊட்டச்சத்துபான பொருட்களில் செயற்கைமணமூட்டும் பொருளும் ,பால் பவுடரும் கட்டி தட்டாமல் இருக்க வேதிப்பொருளும் சேர்ந்துதான் வருகிறது.இந்த ரசாயன பானம் அதிக அளவில் சர்க்கரை கொண்டது.

மேலும் சர்க்கரையே அதாவது வெள்ளை சர்க்கரையே உடலுக்கு கெடுதல்.மனித உடலுக்கு இந்த வெள்ளை சர்க்கரையால் எந்த பயனும் கிடையாது. அதன் தயாரிப்பிலேயே பல வித வேதிப்பொருட்கள் கலந்துதான் வெளிவருகிறது.இனிப்பு என்ற சுவையைத் தவிர இதில் எந்த சத்தும் இல்லை விஷத்தை தவிர…….இப்போது நாம் பயன்படுத்தும் பல்வேறு இனிப்புகளுமே இந்த சத்து அற்ற விஷத்தைக்கொண்டு தயாரிக்கப்படுவதுதான் ….என்ன நேரடியாக சர்க்கரை என்ற பெயரில் சொல்லாமல் சுக்ரோஸ்,மால்டோஸ் ,குளுக்கோஸ் பிரக்டோஸ் என்று பலவித பெயர்களில் கலந்துதான் விற்கப்படுகின்றன.

வெல்லம்,கருப்பட்டி போன்றவற்றை பயன்படுத்தலாம் ஆனால் இவை எல்லாமே சர்க்கரையை விட விலை அதிகம் மேலும் குறைந்த பயன்பாட்டின் காரணமாக தயாரிப்பு செலவு அதிகம்.இருந்தாலும் எளிமையாக தயாரிக்கலாம் .ஆனால்இந்த பொருட்களை ஒழித்துக் கட்டி பெரும் லாபம் ஈட்டவே ஒரு கும்பல் அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து மக்களை வாட்டிவருகிறது.

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் வெல்லம்,கருப்பட்டி முதலியவற்றில் இயற்கையான இரும்பு சத்து கால்ஷியம் போன்றவை உள்ளன.பண்டைய இனிப்பு வகைகள் இவற்றைக்கொண்டு செய்யப்பட்டவைதான்.ஒன்றுக்கும் உதவாத, நீரிழிவு நோயை பெரிய அளவில் பரப்பி வரும் வெள்ளை சர்க்கரையை ஒழித்தாலே நம் மக்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழலாம்.

அடுத்து வெளி உடலை தூய்மை செய்து கொள்ள குளிப்பது.ஆறுகளிலும் குளங்களிலும்,பெரிய நீர் பரப்புகளிலும் தலையை முக்கிவிட்டு அருகில் கிடைக்கும் வைக்கோலையோ அல்லது அடியில் இருக்கும் மணலையோ மண்ணையோ பயன்படுத்தி தேய்த்து உடல் அழுக்கை போக்கி குளித்த காலங்களில் உடலும் நலமும் நன்றாகத்தான் இருந்தது.

பெண்கள் எங்கு குளித்தாலும் உடலுக்கு மஞ்சளும் ,தலைக்கு செம்பருத்தி இலை அல்லது எலுமிச்சை,பூந்திக்காய் மற்றும் சீயக்காய் கொண்டு தயாரித்த பவுடரை தேய்த்து குளித்து வந்தபோது தலையில் இந்த அளவுக்கு வறட்சியும் பொடுகுத் தொல்லையும் வந்ததில்லை.
இப்போது ஆயிரக்கணக்கான ஷாம்பு மற்றும் சோப்புகள் உலா வருகின்றன.இது கேசத்தின் வறட்சியை போக்கும் ,பொடுகு தொல்லை இரண்டே வாரத்தில் அழியும் உடல் ஈரப்பதத்தை நிலை நிறுத்தும் என்று ஏகப்பட்ட காணொளி காட்சிப் பொய்களுடனும் ,யோசித்துப்பார்க்க முடியாத உத்தரவாதங்களுடன்,நமக்கு தெரியாத,புரியாதவேதிப்பொருட்களை உள்ளடக்கி , இதை நாம் நம்ப வேண்டும் என்பதற்காக இந்த பொருட்களை தொடவே தொடாத, சமுதாயத்தில் நன்கு அறிமுகமான நபர்களைக் கொண்டு விளம்பரமும் தருவார்கள்.

எல்லாமே பொய் …எதுவுமே நன்மை கிடையாது,எந்த சோப்பாக இருந்தாலும் ஷாம்பூவாக இருந்தாலும் எதை உட்பொருளாக பயன் படுத்தி இருந்தாலும் செயற்கை நிறமூட்டி,மனமூட்டி நுரையூட்டி இல்லாமல் தயாரிக்கவே முடியாது.

நம் சோம்பேறித் தன்மையையும் ,அவசரத் தன்மையையும் பயன்படுத்தி நம் தலையில் விஷம் தடவி குறைந்த வயதில் நரையையும்,நிறைந்த தோல் நோய்களையும் உண்டாக்கும் இந்த சதிக்கும் சென்ற தலைமுறையிலேயே நாம் ஆளாகிவிட்டோம்.

குளித்து முடித்தவுடன் தலையை நன்கு காயவைத்து அதன் பிறகு நல்ல தேங்காய் எண்ணெய் ,அல்லது தேங்காய் எண்ணெயுடன் நெல்லிக்காய் ,கருவேப்பிலை,செம்பருத்தி போன்ற இயற்கை மூலிகைகளை கலந்து காய்ச்சி ஆறவைத்த எண்ணெயை தலைக்கு இதமாக தடவி சிறிது நேரம் கழித்து நன்கு மர சீப்பால் தலையை வாருவது நடைமுறை.

ஆனால் முதலில் இப்போது கிடைக்கும் புட்டி தேங்காய் எண்ணெய்களில் பெரும்பாலானவை பெட்ரொலிய கச்சா எண்ணெயை அடிப்படையாகக் கொண்டு செயற்கை மனமூட்டிகளையும் கலந்து தயாரிக்கப் பட்டவையே,நாள்பட்ட பயன்பாட்டில் முடி கொட்டும் பிறகு வளரவே வழி இல்லாமல் போகும் .கேச பராமரிப்பிற்கு மிகவும் குறைந்த தேவை வேறு எதுவுமே இல்லை.தலை குளித்து விட்டு வந்தபின் நன்கு காய வைத்து சிறிதளவு நல்ல தேங்காய் எண்ணணெய் எடுத்து கை விரல் நுனிகளில் படும்படி வைத்து அதை முடியின் வேர்க்கால்களில் படும் படி நிதானமாக தடவிக் கொடுத்து பின்னர் தலை அலங்காரம் செய்து கொள்ள வேண்டியதுதான்

.இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது குளித்த தலை நன்கு ஈரம் காய்ந்த பின் மேற்சொன்ன படி செய்தாலே முடி உதிராது..நன்கு வளரும். சந்தையில் கிடைக்கும் ஹேர் ஆயில்,ஹேர் கிரீம் ,லோஷன்,இன்னும் என்ன ஃபேஷன் பொருளானாலும்அவற்றை அவசரத்திற்கு அன்றோ இன்றோ பயன்படுத்திக் கொள்ளலாம்.முக்கியமாக செக்கில் ஆட்டி எடுத்த உயர் ரக ,விலை மலிவான எண்ணெய் நிச்சயம் போதுமானது.பிசுக்கு ஒட்டாது கைகளில் ,உடைகளில் கரை படியாது என்று விளம்பரப்படுத்தி விற்கப்படும் வேறு எதுவும் தேவையே இல்லை.

தேங்காய் எண்ணெய் தலைக்கு ,உடலுக்கு தேவையான சீரான வெப்பத்தை பராமரிக்கும்.மேலும் மூளை தொடர்பாக எழும் சில சிக்கல்களையும் போக்க வல்லது.

தலை பராமரிப்புக்கு பின் அனைவரும் முக்கியம் தருவது முகப்பொலிவிற்குதான் .சர்வதேச சந்தையில் உணவை விட அதிக விளம்பரங்களுடன் ,மக்களை ஏமாற்றி பெரும் செல்வந்தர்களாக வளம் கொழிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள் முதல் அவர்களிடம் லைசென்ஸ்
பெற்று தயாரிப்பதாக கூறிகொள்ளும் லோக்கல் அவதாரங்கள் வரை இன்று தயாரித்து வரும் எந்த பொருளும் நிஜமாகவே நமக்குத் தேவையே இல்லை .

எந்த பவுடரும் ,லோஷனும்,க்ரீமும் நிச்சயமாக நம் முகத்திற்கு ,முகத்தின் மேல் உள்ள தோல் பகுதிக்கு சத்தையோ அல்லது மிருது தன்மையையோ வழங்காது.பருக்களை மறைக்குமே தவிர பரு உருவாகும் காரணத்தை தடுக்காது.

நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் அது ஆண் ஆனாலும் பெண்ணானாலும் பத்து வயது முதற்கொண்டு (முன்பெல்லாம் 12வயது)முகத்தின் தோல்களில் அனைவருக்கும் மாறுதல் வர ஆரம்பிக்கும்.அந்த கால கட்டத்தில் நாம் உன்னிப்பாக கவனித்து செய்ய வேண்டியது… நல்ல முறையில் நம் உணவு முறையை சரி செய்து கொள்ள வேண்டியதுதான்.இளம்வயதில் வரும் இந்த பரு ,சிறிய கொப்புளங்கள் முதலில் நம் முகத்தின் தோலின் கீழ்ப்பகுதியில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப் படுத்தும் இயற்கை நிகழ்வுதான்.இந்த கால கட்டத்தில் எண்ணெயில் பொரித்தெடுத்து செய்யும் உணவுப் பொருட்களையும்,அதிக வெப்பத்தில் வாட்டப்பட்ட நமது சூழ்நிலைக்கு தேவையே இல்லாத கேக்குகள், பிஸ்கட்டுகள், ரொட்டி,நான்,சப்பாத்தி முதலியவற்றை சிறிது காலம் தவிர்த்து சத்தான காய்கறிகள் பழங்கள் ஊறவைத்த முழு தானிய வகைகள், அசைவம் என்றால் வாரம் ஒருமுறை நம் உள்ளங்கை அளவுக்கு எண்ணையில் பொரிக்காத அசைவப் பொருட்களைக் கொண்டு செய்த குழம்பு,கூட்டு குருமா போன்ற உணவு வகைகளை சாப்பிட்டு வரலாம்.
நாள் ஆக ஆக தானாகவே வெளிவரும் இந்தக் கழிவுகள் குறைந்து முகம் பொலிவு பெரும்..நிரந்தர அழகும் கிடைக்கும்.

இதைத் தவிர சந்தையில் கிடைக்கும் எந்த சருமப்பராமரிப்பும் நமக்கு தேவையே இல்லாதது. இயற்கை சார்ந்த நல் உணவும் ,நல்ல உறக்கமும் சுத்தமான காற்றோட்டம் மிக்க இடங்களில் இருப்பதும் போதும். ஃபேன்காற்று ,ஏ.சி.குளிர்ச்சி ,ஐஸ் வாட்டர் போன்றவை கண்டிப்பாக தேவையற்றது.