September 24, 2021

தமிழ் மாநில காங்கிரஸ்(மூப்பனார்)- வாசன் கட்சி பெயர்!

திருச்சியில் இன்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தன் புதிய கட்சியின் பெயர் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்று அறிவித்தார் ஜி.கே. வாசன்.மேலும் ”மீண்டு தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாகிறது” எனவும் ’நமது சின்னம் சைக்கிள்’ என்றும் வாசன் அறிவித்தார்.
vasan nov 28
காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் வரிசையில் முக்கியமானவராக இருந்தவர் மூப்பனாரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.இதன் படி கட்சியின் கொடியை நேற்று முன்தினம் (26-ந்தேதி) ஜி.கே.வாசன் சென்னையில் அறிமுகம் செய்துவைத்தார். அதில் காங்கிரஸ் கொடி போலவே காவி, வெள்ளை, பச்சை நிறத்துடன் காம ராஜர், மூப்பானர் படங்கள் இடம் பெற்றிருந்தன.

இதையடுத்து மாநாட்டை அறிவிக்கும் வகையில் நேற்று சென்னையில் ராட்சத பலூ னையும் பறக்கவிட்டார். அதன் தொடர்ச்சியாக புதிய கட்சி தொடக்க விழா திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் இன்று மாலை நடந்தது.. அங்கு 60 அடி நீளம், 40 அடி அகலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது.கோட்டை வடிவிலான மேடையின் வலதுபுறம் வளமான தமிழகம் என்ற வாசகத்துடன் புனித ஜார்ஜ் கோட்டையும், இடதுபுறம் வலிமையான பாரதம் என்ற வாசகத்துடன் டெல்லி செங்கோட்டையின் மாதிரியும் இருந்தது

திருச்சியில் அதிரடியாக விடாது கொட்டும் மழையிலும் மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் கூட்டம் தொடகியதுது. 5 மணிக்கு விழா மேடைக்கு ஜி.கே. வாசன் வந்தார். அதற்கு முன்ன்னதாக விழா மேடை அருகே அமைக்கப்பட்டுள்ள 32 அடி உயர கொடியை தியாகி அருணாசலம் ஏற்றிவைத்தார். ஜி.கே.வாசன் அப்போது தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். அபோது தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

பின்னர் ஜி.கே.வாசன் கட்சியின் பெயரை அறிவித்தார். கட்சியின் பெயர் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் தமிழ் மாநில காங்கிரஸ்( மூப்பனார்) என்று அவர் அறிவித்தார். அப்போது தொண்டர்கள் மூப்பனார், காமராஜர், ஜி.கே.வாசன் வாழ்க என்று கோஷமிட்டனர்.