September 25, 2021

தமிழ் நாடு தோட்டக்கலைத் துறை வழங்கும் நீங்களே போடலாம் மாடித் தோட்டம்!

வீட்டிற்கு அழகு சேர்க்கும் ஒரு அங்கமாக விளங்குவது தான் தோட்டம். பெரிய வீட்டில் பார்த் தால் தோட்டத்திற்கென்று ஒரு பெரிய இடம் ஒதுக்கி, அதை பராமரிக்க தனியாக வேலை யாட்களும் இருப்பர். அப்படியானால் சின்னதாக வீடு வைத்திருப்பவர்களுக்கு தோட்டம் என்பது வெறும் கனவு தானா? என்று நினைக்கலாம். அது தான் இல்லை. தோட்டம் என்றால் பெரிய இடத்தில் தான் போட முடியும் என்றில்லை. கிடைத்த சின்ன இடத்தில் கூட தோட்டத்தை உரு வாக்கலாம். சிறிய இடத்தில் அமைத்த சின்ன தோட்டம் கூட பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஒவ்வொருவரும் அவர்களின் இட வசதிக்கேற்ப தங்களின் தோட்டத்தை அமைத்துக் கொள்கின் றனர். அது ஜன்னலருகே இருக்கும் இடமாகட்டும் அல்லது வீட்டின் உள்ள முற்றமாகட்டும். அல்லது மொட்டை மாடியாகட்டும்.. எங்கும் தோட்டம் போடலாம்? அப்படி தோட்டம் போட ஆசை இருந்தும் உரிய வழி தெரிய வில்லையா?உங்களுக்கு வழிகாட்ட தயாராக இருக்கிறதுதமிழ் நாடு தோட்டக்கலைத் துறை வழங்கும் நீங்களே போடலாம் மாடித் தோட்டம்
tn horticullture sep 29
இதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது Directorate of Horticulture and Plantation Crops(AGRICULTURE DEPARTMENT, GOVERNMENT OF TAMILNADU) ஆபீஸ் போய் இதற்கான பொருட்கள் தொகுப்பு வாங்க வேண்டும்.. இதன் விலை ரூபாய் – 1325 -/

இந்த தொகுப்பில் வருபவை கீழ்க்கண்டவாறு..

1. 20 எண்ணிக்கை பாலிதீன் செடி வளர்ப்பு பைகள்.. 24 இன்ச்சுக்கு 18 இன்ச்சு அளவு, 2 கிலோ எடை உள்ள கோகோபீட் ஒரு ஒரு பையிலும் ( தேங்காய் நார்க் கழிவு – மண்ணுக்கு இணையானது )

2. 4 மீட்டருக்கு 4 மீட்டர் அளவிலான பாலிதீன் விரிப்பு… (400 ஜி எஸ் எம் தடிமன் )

3. நீரில் கரைத்து உபயோகப் படுத்தக் கூடிய உரம் ஒரு பாக்கட்

4. இயற்க்கை உயிரி உரம் ஒரு பாக்கட்

5. இயற்க்கை உயிரி பூச்சிக் கொல்லி ஒரு பாக்கட்

6. இயற்கை உயிரி ந்ற்ப் பூஞ்சைகள் ஒரு பாக்கட்

7. 5 லிட்டர் அளவு நீரூற்றும் பூவாளி..

8.. 1 லிட்டர் கொள்ளவு உள்ள உரம் தெளிக்கும் ஸ்பிரேயர்

9. ஒரு சிறிய மண் கிளறி

10. ஒரு கையளவு உள்ள மண்ணை அள்ளிப் போட உதவும் மண் அள்ளிக் கரண்டி..

11. 50 சிறு குழிகள் கொண்ட , விதை விதைக்கும் தட்டு ஒன்று…

12. 10 வகையான , வீட்டில் அன்றாட சமையலுக்கு பயன்படும், காய்கறிகளின், கீரை வகைகளின் விதைகள்..

13.. நாமே புரிந்து பயிர் செய்யும் வகையிலான , ஒரு விரிவான விளக்க கையேடு… தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்…

இவை அனைத்தும் சலுகை விலையில் தமிழக அரசு தோட்டக் கலைத்துறை வழங்குகிறது… வெறும் ரூபாய் 1325 -/ க்கு…

மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர், அவரவர் வசிக்கும் இடத்தின் அருகாமை யில் இருக்கும் , அரசு தோட்டக் கலைத்துறை அலுவலகத்தில், நேரில் சென்று வாங்கி கொண்டு, விளக்கப் பயிற்ச்சியும் அங்கேயே எடுத்து கொள்ளலாம்… இதற்கு தேவை ரூபாய் 1325 -/ ம், உங்களது ஒரு பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்பட மும், ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட் போன்ற ஏதேனும் ஒரு இருப்பிட சான்று நகலை அளித்தாலே போதுமானது…

ஒரு நபர், 5 கிட் வரை மட்டுமே வாங்க முடியும்…

நேரில் போக முடியாதவர்களுக்கு, இணையத்திலும் விண்ணப்பித்து வாங்க முடியும்  நேரடியாக இல்லத்தில் இருந்தபடியே.. அதற்கு கீழ்க்காணும் இணைய தளத்தில் விண்ணப்பித்தால் போதுமானது….

http://tnhorticulture.tn.gov.in/horti/application-do-yourself-kit

நேரில் சென்றால் , உங்கள் வீட்டு அமைப்பு, ஆழ்த்துளை கிணற்று நீரின் தன்மை, இவற்றை பரிசோதித்து, மாடி தோட்டம் பராமரிப்பு பற்றி விளக்கமும் பெறலாம்… அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கூட்டாக சேர்ந்து குடியிருப்பு மாடியில் தோட்டம் அமைக்கும் பட்சத்தில் அதற்கு மானிய வசதிகளும் , அறுவடை செய்யும் விளை பொருட்களை சந்தைப் படுத்தவும் தமிழக தோட்டக் கலை நிறுவனமே உதவும் என்பது அடிசினல் தகவல்…

விருப்பம் இருப்பவர்கள் இதன் மூலம் பலன் அடையுங்கள்…நமக்கு தேவையான, இயற்கையான விளைபொருட்களை நாமே விளைவித்து நம் வருங்கால சந்ததி யையும் காக்க ஒரு வாய்ப்பு