October 19, 2021

தமிழ் திரையுலகினருக்கு பயம் மட்டும் அண்டா அண்டாவாக இருக்கிறது! – தயாநிதி அழகிரி கமெண்ட்

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ் திரையுலகமும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. இதனிடையே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள திரையுலகினர் குறித்து தயாநிதி அழகிரி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
alagiri sep 30
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘’இன்று தமிழ் திரையுலகினர் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக மேற்கொள்கிறார்களா? அல்லது நீதிமன்றத்தைக் கண்டித்து போராடுகிறார்களா? வரி விதிப்பு மற்றும் ‘தலைவா’, ‘விஸ்வரூபம்’ போன்ற படங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைப் போராட்டம் மேற்கொள்வதற்கு முன் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.தமிழ் திரையுலகினருக்கு இந்த சிந்தனையில்லை. பயம் மட்டும் தான் அண்டா அண்டாவாக இருக்கிறது. ஹா ஹா ஹா’’என்று தயாநிதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகனான தயாநிதி அழகிரி ‘வாரணம் ஆயிரம்’, ‘மங்காத்தா’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது