• Latest
  • Trending
  • All
தமிழ்நாட்டில் மேலும் கூடுதல் தளர்வுகள்!- முதல்வர் அறிவிப்பு முழு விபரம்!

தமிழ்நாட்டில் மேலும் கூடுதல் தளர்வுகள்!- முதல்வர் அறிவிப்பு முழு விபரம்!

2 months ago
ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று!

ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று!

12 hours ago
வன்முறைக் களமான டெல்லி :  கண்ணீர்ப் புகை, தடியடி, உயிரிழப்பு! – வீடியோக்கள்!

வன்முறைக் களமான டெல்லி : கண்ணீர்ப் புகை, தடியடி, உயிரிழப்பு! – வீடியோக்கள்!

12 hours ago
சென்னை மெரினா கடற்கரையில் 72வது குடியரசு தின விழா கோலாகலம்!

சென்னை மெரினா கடற்கரையில் 72வது குடியரசு தின விழா கோலாகலம்!

13 hours ago
மத்திய அரசு அறிவித்துள்ள  பத்ம விருதுகள் – முழுப் பட்டியல்!

மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகள் – முழுப் பட்டியல்!

1 day ago
பழைய வாகனங்களுக்கு பசுமை வரி- மத்திய அமைச்சர்  ஒப்புதல்

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி- மத்திய அமைச்சர் ஒப்புதல்

2 days ago
தமிழில்  காமெடி, அட்வெஞ்சர்,  & திரில்லர் பாணியிலான முதல் படம் ‘ட்ரிப்’!

தமிழில் காமெடி, அட்வெஞ்சர், & திரில்லர் பாணியிலான முதல் படம் ‘ட்ரிப்’!

2 days ago
வாக்காளர் அடையாள அட்டையை இனி செல்போன் மூலமாகவே பெறலாம்!

வாக்காளர் அடையாள அட்டையை இனி செல்போன் மூலமாகவே பெறலாம்!

2 days ago
ஸ்பேஸ் எக்ஸ் – 143 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை! வீடியோ!

ஸ்பேஸ் எக்ஸ் – 143 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை! வீடியோ!

2 days ago
மகனுக்கு கட்டளையிடுங்க தாயே!- மோடி அம்மாவுக்கு விவசாயி கடிதம்!

மகனுக்கு கட்டளையிடுங்க தாயே!- மோடி அம்மாவுக்கு விவசாயி கடிதம்!

2 days ago
கப்பல்படை பயிற்சி அகாடமியில் கல்வி வாய்ப்பு!

கப்பல்படை பயிற்சி அகாடமியில் கல்வி வாய்ப்பு!

2 days ago
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைக் கட்ட முயலும் சீனாவால் பதட்டம்!

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைக் கட்ட முயலும் சீனாவால் பதட்டம்!

3 days ago
தமிழக ஆட்சியாளர்களை தலைகீழாக மாற்ற முயலும் மோடி- ராகுல் பேச்சு – வீடியோ!

தமிழக ஆட்சியாளர்களை தலைகீழாக மாற்ற முயலும் மோடி- ராகுல் பேச்சு – வீடியோ!

3 days ago
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்
Wednesday, January 27, 2021
  • Login
AanthaiReporter.Com
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்
No Result
View All Result
AanthaiReporter.Com
No Result
View All Result
Home தமிழகம்

தமிழ்நாட்டில் மேலும் கூடுதல் தளர்வுகள்!- முதல்வர் அறிவிப்பு முழு விபரம்!

November 30, 2020
in தமிழகம்
0
507
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், புதிய தளர்வுகளை அளிப்பது குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அதையடுத்து தமிழ்நாட்டில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment Zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வு களுடன் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள (- 30.11.2020) அறிக்கை விவரம்:

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பி னாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், நோய்த் தொற்று விகிதம் 6.55 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,600 நபர்களுக்கு கீழாகவே உள்ளது.

சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000ல் இருந்து தற்போது 11,000 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.

தமிழ்நாட்டில் 30.11.2020 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 28.11.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய் பரவல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 30.11.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment Zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது:

கல்லூரிகள் திறப்பு

1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

2) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை (UG), முதுநிலை (PG) வகுப்புகள்) 7.12.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

எனினும், 2020 – 2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

3) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக (sports Training) மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

4) வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

5) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது.

6) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு (Business to Business purposes) மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

7) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் (50% capacity) அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1.12.2020 முதல் 31.12.2020 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும்.

8) வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு (E-registration) முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-

O மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

O தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones)) தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பல்வேறு தளவுர்களுக்கு தனித்தனியே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.

எனவே, பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share203Tweet127Share51

Latest

ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று!

ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று!

January 27, 2021
வன்முறைக் களமான டெல்லி :  கண்ணீர்ப் புகை, தடியடி, உயிரிழப்பு! – வீடியோக்கள்!

வன்முறைக் களமான டெல்லி : கண்ணீர்ப் புகை, தடியடி, உயிரிழப்பு! – வீடியோக்கள்!

January 27, 2021
சென்னை மெரினா கடற்கரையில் 72வது குடியரசு தின விழா கோலாகலம்!

சென்னை மெரினா கடற்கரையில் 72வது குடியரசு தின விழா கோலாகலம்!

January 26, 2021
மத்திய அரசு அறிவித்துள்ள  பத்ம விருதுகள் – முழுப் பட்டியல்!

மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகள் – முழுப் பட்டியல்!

January 26, 2021
பழைய வாகனங்களுக்கு பசுமை வரி- மத்திய அமைச்சர்  ஒப்புதல்

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி- மத்திய அமைச்சர் ஒப்புதல்

January 26, 2021
தமிழில்  காமெடி, அட்வெஞ்சர்,  & திரில்லர் பாணியிலான முதல் படம் ‘ட்ரிப்’!

தமிழில் காமெடி, அட்வெஞ்சர், & திரில்லர் பாணியிலான முதல் படம் ‘ட்ரிப்’!

January 25, 2021
வாக்காளர் அடையாள அட்டையை இனி செல்போன் மூலமாகவே பெறலாம்!

வாக்காளர் அடையாள அட்டையை இனி செல்போன் மூலமாகவே பெறலாம்!

January 25, 2021
ஸ்பேஸ் எக்ஸ் – 143 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை! வீடியோ!

ஸ்பேஸ் எக்ஸ் – 143 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை! வீடியோ!

January 25, 2021
AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

Copyright © 2017 JNews.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்

Copyright © 2017 JNews.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In