October 16, 2021

தமிழ்நாட்டில் கல்வியின் தரம் சீரழிந்து வருகிறது டாக்டர் ராமதாஸ் வேதனை!

“தமிழ்நாட்டில் நடைபெறும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து 90 சதவீதத்தை தாண்டி விட்டது. அதுமட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் கூட 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. அதே நேரத்தில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர் எண்ணிக்கை 75 சதவீதத்தில் இருந்து படிப்படியாக குறைந்து 49 சதவீதம் என்ற நிலைக்கு குறைந்துவிட்டது.”என்றும் டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
ramdoss oct 28
இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”51 சதவீத மாணவர்கள் தோல்வி
தமிழ்நாட்டில் இளம் பொறியியல் (என்ஜினீயரிங்) மற்றும் இளம் தொழில்நுட்பவியல் (பி.இ., பி.டெக்.) பட்டப்படிப்புகளின் தேர்ச்சி விகிதம் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்ட பருவத் தேர்வுகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு பயிலும் 7.02 லட்சம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இவர்களில் 3.47 லட்சம் பேர் மட்டுமே, அதாவது 49.49 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 51 சதவீத மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
சிறந்த உயர்கல்வியாக கருதப்படும் பொறியியல் படிப்பு பயில்பவர்களில் பாதிப்பேர் கூட தேர்ச்சி பெற முடியவில்லை என்பது தமிழகத்தில் கல்வியின் தரம் நாளுக்கு நாள் எவ்வளவு சீரழிந்து வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் நடைபெறும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து 90 சதவீதத்தை தாண்டி விட்டது. அதுமட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் கூட 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. அதே நேரத்தில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர் எண்ணிக்கை 75 சதவீதத்தில் இருந்து படிப்படியாக குறைந்து 49 சதவீதம் என்ற நிலைக்கு குறைந்துவிட்டது.
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியின் தேர்ச்சி விகிதங்கள் எதிரெதிர் திசைகளில் செல்வதற்கான காரணங்கள் என்ன? என்பதை கண்டறிந்து சரிசெய்தால் மட்டுமே கல்வித்தரத்தை உயர்த்த முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் கல்வித்தரம் மோசமாக இருப்பதும், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை என்பதும் இன்னொரு காரணம் ஆகும். தமிழ்நாட்டில் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படித்துவிட்டு வேலையில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை 3.52 லட்சம் என்று வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது. ஒருபுறம் பொறியியல் கல்லூரிகள் வேலைக்கு தகுதியில்லாதவர்களை உருவாக்கிவரும் நிலையில், இன்னொரு புறம் தமிழ்நாடு பள்ளிகள் பொறியாளர் ஆவதற்கு தகுதியில்லாத மாணவர்களை உருவாக்கி வருவது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். இது அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை பின்னுக்கு கொண்டு சென்றுவிடும்.எனவே, ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் இனியாவது விழித்துக்கொண்டு கல்வித்தரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிந்திக்கும் திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கும் அளவுக்கு பள்ளிகளின் பாடத்திட்டத்தையும், வேலைவாய்ப்புக்கு தகுதி பெற்றவர்களை உருவாக்கும் அளவுக்கு கல்லூரிகளின் பாடத்திட்டங்களையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.”என்று அவர் தெரிவித்துள்ளார்.