August 1, 2021

தமிழ்நாடு மீன் வளத்துறையில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் ஜாப்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மீன்வளத்துறையும் முக்கியமான ஒரு துறை. இத்துறையில் தற்சமயம் காலியாக இருக்கும் 13 டெக்னிகல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி : சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க லாம்.விண்ணப்பக் கட்டணம் ரூ.400/-க்கான டி.டி.,யை Executive Engineer, Fishing Harbour Project Division, Chennai என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., விதவைகள், மாற்றுத் திறனாளிகள் பிரிவினராக இருந்தால் ரூ.200/-க்கு எடுத்தால் போதுமானது.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Chief Engineer, O/o.the Director of Fisheries, Fisheries Department, DMS Campus, Teynampet, Chennai-600 006.

கடைசி நாள் : 2017 ஜூலை 14.

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு