September 26, 2021

தமிழ்நாடு போலீஸ் வெப்சைட் அப்டேட் ஆயிடுச்சுங்கோ!

தமிழக அரசை பொறுத்தவரை, ‘tn.gov.in’ என்ற வெப்சைட் அப்டேட்டில் உள்ளது. இதில் அன்றாட நிகழ்வுகளைப் பார்த்துக் கொள்ளலாம். முதல்வரிடம் கூட புகார் அளிக்கலாம்.இன்னும் பல தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.இதில்தான் பலரும் போலீஸ் குறித்தும், போலீஸி டம் தெரிவிக்க வேண்டியதுப் பற்றியும் கமெண்ட்டிட்டு வந்தாரகள். இந்நிலையில் வெகு காலமாக முடங்கி கிடந்த தமிழக போலீசாரின் இணையதளம், புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது போலீஸ் அதிகாரிகளின் மொபைல் போன் எண்கள் மற்றும் பொதுமக்கள் குற்றச் செயல்களில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்த விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதால் இதற்கு, பொதுமக்கள் மற்றும் இணையதள பயன்பாட்டாளர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
tn police web sep 25
‘ஸ்காட்லாந்து யார்டு’ போலீசாருக்கு இணையாகக் தன்னை வர்ணித்துக் கொள்ளும் தமிழக போலீசாரின் வெப்சைட்மிகவும் பழமையான முறையில் வடிவமைக்கப் பட்டு இருந்தது. மேலும் அதில் போதிய தகவல்கள் இல்லை; போலீஸ் அதிகாரி களின் மொபைல் போன் எண்கள் தவறாக இடம் பெற்ரு இருந்தன. இதனால், அவசர தேவைக்கு போலீசாரை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் மற்றும் இணையதள பயன்பாட்டாளர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, டி.ஜிபி.,அலுவலக உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வெப்சைட்டை தற்போதைய தகவல்களுடனும், கலைநயத்துடனும் வடிவமைப்பது என, முடிவு செய்தனர். அதற்கான பணிகள் நிறைவு பெற்று, தற்போது புதுப்பொலிவுடன் போலீஸ் இணையதளம் காட்சி யளிக்கிறது. இதில், தமிழக போலீஸ் பற்றிய வரலாறு, தகவல் பெறும் உரிமை சட்டம், வேலைவாய்ப்பு, காணாமல் போனவர்களின் புகைப்படம் மற்றும் அவர்களின் உறவினர்களின் மொபைல் போன்எண்களும் இடம் பெற்றுள்ளன. இது தவிர, ‘ஆன் – லைனில்’ புகார் அளிக்கும் வசதி, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பார்க்கும் வசதி, அதன் மீது போலீசார் எடுத்துள்ள நடவடிக்கை, சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பதிவேடு குறித்த விவரங் களும் இடம் பெற்றுள்ளன. மேலும், சி.பி.சி.ஐ.டி., போதை பொருள் தடுப்பு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் இணையதளங்கள், பிற மாநில போலீஸ் இணையதளங்களும் இணைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.